பேராவூரணி அருகே உள்ள மல்லிப்பட்டினம் கடலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் புனிதநீராடினர்.
தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத் தி ரம் அருகே உள்ள மல்லிப்பட்டினத்தில் அமைந்துள்ள கோதண்டராமர் கோயிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு முழுவ தும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று அதிகாலை சுவாமி ஊர்வலமாக புறப்பட்டுச் சென்று மல்லிப்பட்டினம் கடலில் தீர்த்த வாரி நடைபெற்றது. அப்போது அங்கு கூடியிருந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டபக்தர்கள் கடலில் புனிதநீராடினர். மேலும் கடற்கரையில் தங்கள் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுத்துவிட்டு கோதண்டராமர் கோவிலில் சுவாமிதரிசனம் செய்து விட்டு சென்றனர்.