தஞ்சாவூர் அர ண்மனை வளாகத்தில் நடை பெறவுள்ள புத்தகத் திருவி ழாவிற்கான முன்னே ற்பாடு பணிகளை மாவட்டஆட்சியர் ஆ.அண்ணா துரை வியாழக்கிழமை யன்று நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.பின்னர் செய்தியாள ர்களிடம் மாவட்ட ஆட்சியர் பேசுகையில், “தஞ்சா வூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அரண்மனை வளாகத்தில் வருகின்ற ஜூலை 15 முதல்ஜூலை 24 வரை புத்தகக்கண்காட்சி நடைபெறவு ள்ளது. புத்தகக் கண்கா ட்சியில் 103 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. 74 முன்னணி புத்தகப் பதிப்பு நிறுவனங்கள் இதில் கலந்து கொள்கின்றனர். மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் மற்றும் அண்டை மாவட்டங்களில் உள்ள பொதுமக்களும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி புதிய நூல்கள் பற்றி தெரிந்து வாங்கிச் செல்லலாம். எனவே இந்த புத்தகக் கண்காட்சியினை பயன்படுத்தி கொள்ள வேண்டும். பல்கலைக்கழக ஆராய்ச்சி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும்பொது மக்கள் பயன் பெறும் வகையில் தஞ்சாவூர் புத்த கத் திருவிழா நடைபெற வுள்ளது. இப்புத்தக திருவிழா காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். நுழைவுக் கட்டணம் கிடையாது’’ என்றார்.