பேராவூரணியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து ஆலோசனைக் கூட்டம்.

Unknown
0




பேராவூரணியில் அனைத்து கட்சிகள், விவசாய சங்க ங்கள், மாணவர் இயக்க ங்கள், சமூக ஆர்வலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் செவ்வாயன்று பேரூ ராட்சி திருமண மண்ட பத்தில் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் சுற்றுவட்டாரப் பகுதியில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை தடை செய்யவலியுறுத்தி வரும் ஜூலை15 ஆம் தேதி புதுக்கோ ட்டையில் நடைபெறவுள்ள பெருந்திரள் ஆர்ப்பா ட்டத்தில் தொகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்வது குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.இக்கூட்டத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் புஷ்பராஜ் தலைமை வகித்தார். ஒருங்கி ணைப்பாளரும் பேரூராட்சி முன்னாள் தலைவருமான என்.அசோக்குமார் வர வேற்றார். முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் சாமி நாதன், பண்ணைவயல் முன்னாள் ஊராட்சித் தலை வர் ராஜாத்தம்பி, முன்னாள்ஒன்றியப் பெருந்த லைவர்கள் ஆ.பழனிவேலு, இராஜரெத்தினம், சிபிஐ மாவட்டச் செயலாளர் இரா. திருஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் வரும் ஜூலை 15 ஆம் தேதிசனிக்கிழமை புதுக்கோ ட்டை சின்னப்பா பூங்கா வில் நடைபெறும் ஹைட்ரோகார்பன் திட்ட த்திற்கு எதிரான பெருந்திரள் ஆர்ப்பா ட்டத்தில் ஆயிரக்கணக்கான வாகன ங்களில் சென்று கலந்து கொள்வது, மத்திய, மாநிலஅரசுகள் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும். நெடு வாசல், நல்லாண்டார் கொல்லை, கருக்கா க்குறிச்சி, வடகாடு, புள்ளா ன்விடுதி, கல்லி க்கொல்லை, வானக்க ன்காடு, கோட்டைக்காடு பகுதிகளில் அமைக்க ப்பட்டுள்ள ஹைட்ரோ கார்பன் சோதனை குழா ய்களை ஒப்புக்கொண்டபடி அப்புறப்படுத்த வே ண்டும்” என தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top