பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி.
ஜூலை 19, 2017
0
பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு செவ்வாய்க்கிழமை வட்டாட்சியர் ரகுராமன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தேர்தல் பிரிவு துணை வட்டாட்சியர் பி.அருள்ராஜ் முன்னிலை வகித்தார். இம்முகாமில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு பயிற்சி மற்றும் படிவம் 6, 7, 8, 8ஏ, பதிவேடுகள் வழங்கப்பட்டன. இம்முகாமில் கண்காணிப்பாளர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் உள்ளிட்ட 250 பேர் கலந்து கொண்டனர்.
நன்றி : தீக்கதிர்
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க