ஆகஸ்டு 9 (August 9) கிரிகோரியன் ஆண்டின் 221 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 222 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 144 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
கிமு 48 – ஜூலியஸ் சீசர் பம்பீயை சமரில் தோற்கடித்தான். பம்பீ எகிப்துக்கு தப்பி ஓடினான்.
378 – ரோமப் பேரரசன் வேலென்ஸ் தலைமையிலான பெரும் படை எகிப்தில் தோல்வியடைந்தது. மன்னனும் அவனது பாதிப்பங்குப் படையினரும் கொல்லப்பட்டனர்.
1048 – 23 நாட்களே பதவியில் இருந்த பின்னர் திருத்தந்தை இரண்டாம் டமாசஸ் இறந்தார்.
1173 – பீசா சாயும் கோபுரத்தின் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன. இது இரு நூற்றாண்டுகளுக்குப் பின்னரே முடிவுற்றது.
1655 – ஒலிவர் குரொம்வெல் பிரபு இங்கிலாந்தை ஒன்பது மாகாணங்களாகப் பிரித்தார்.
1842 – ஐக்கிய அமெரிக்காவுக்கும் கனடாவுக்கும் இடையில் ரொக்கி மலைகளின் கிழக்குப் பகுதியில் எல்லைகளுக்கான உடன்பாடு எட்டப்பட்டது.
1892 – தோமஸ் அல்வா எடிசன் தனது இருவழி தந்திக்கான காப்புரிமம் பெற்றார்.
1902 – ஏழாம் எட்வேர்ட் ஐக்கிய இராச்சியத்தின் மன்னனாக முடிசூடினான்.
1902 – யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் ரோமன் கத்தோலிக்க ஆலயம் ஒன்றும் பாடசாலை ஒன்றும் இந்துக்களால் தாக்கி அழிக்கப்பட்டன.
1907 – இங்கிலாந்தில் பிறௌன்சி தீவில் ஆகஸ்ட் 1 இல் ஆரம்பிக்கப்பட்ட சாரணிய இயக்கத்தின் முதல் பாசறை முடிவடைந்தது.
1942 – வெள்ளையனே வெளியேறு இயக்கத்தைத் துவக்கியதற்காக மகாத்மா காந்தி உட்படப் பல இந்திய காங்கிரஸ் தலைவர்கள் பம்பாயில் கைது செய்யப்பட்டார்.
1945 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய நகரான நாகசாக்கியின் மீது ஐக்கிய அமெரிக்கா வீசிய கொழுத்த மனிதன் எனப் பெயரிடப்பட்ட அணுகுண்டு 70,000 முதல் 90,000 வரையான பொதுமக்களை அதே இடத்தில் கொன்றது.
1965 – சிங்கப்பூர் மலேசியக் கூட்டமைப்பில் இருந்து பிரிந்து தனி நாடாகியது.
1965 – ஆர்கன்சசில் டைட்டான் ஏவுகணைத் தளத்தில் இடம்பெற்ற தீ விபத்தில் 53 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
1974 – வாட்டர்கேட் ஊழல்: அமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சன் பதவி விலகினார்.
1991 – யாழ்ப்பாணத்தில் விடுதலைப் புலிகள் ஜூலை 10இல் ஆரம்பித்த ஆனையிறவு இராணுவ முகாமின் மீதான தாக்குதல் முடிவுக்கு வந்தது. இச்சமரில் 604 விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டனர். எனினும் 2000ம் ஆண்டில் மீளத் தாக்குதல் மேற்கொண்டு தளத்தைக் கைப்பற்றினர்.
2006 – திருகோணமலைப் பகுதியில் தமிழ் மக்கள் வெருகல் ஊடாக இடம் பெயர்ந்தபோது விமானத் தாக்குதலுக்குள்ளாகியும் எறிகணைத் தாக்குதலாலும் 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்
1776 – அமேடியோ அவகாதரோ, இத்தாலிய வேதியியலாளர் (இ. 1856)
1974 – மகேஷ் பாபு, தெலுங்கு திரைப்பட நடிகர்
இறப்புகள்
1962 – ஹேர்மன் ஹெசே, நோபல் பரிசு பெற்ற ஜேர்மனிய எழுத்தாளர் (பி. 1877)
1969 – செசில் பிராங்க் பவெல், நோபல் பரிசு பெற்ற பிரித்தானிய இயற்பியலாளர் (பி. 1903)
1975 – திமீத்ரி சொஸ்தகோவிச், ரஷ்ய இசையமைப்பாளர் (பி. 1906)
2000 – ஜோன் ஹர்சானி, நோபல் பரிசு பெற்ற ஹங்கேரிய பொருளியலாளர் (பி. 1920)
சிறப்பு நாள்
சிங்கப்பூர் – விடுதலை நாள் (1965)
தென்னாபிரிக்கா – தேசிய பெண்கள் நாள்