வரலாற்றில் இன்று ஆகஸ்டு 11.

Unknown
0
ஆகஸ்டு 11 (August 11) கிரிகோரியன் ஆண்டின் 223 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 224 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 142 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்

கிமு 2492 – ஆர்மீனியா அமைக்கப்பட்டது.
கிமு 480 – பாரசிகர்கள் கிரேக்கர்களை கடற்சமரில் வென்றனர்.
கிமு 586 – ஜெருசலேமில் சாலமோன் மன்னனால் கட்டப்பட்ட முதலாவது ஆலயம் பாபிலோனியர்களினால் அழிக்கப்பட்டது.
355 – நாட்டுத்துரோகக் குற்றம் சாட்டப்பட்ட குளோடியஸ் சில்வானஸ் ரோமப் பேரரசனாகத் தன்னை அறிவித்தான்.
1786 – மலேசியாவில் பெனாங்க்கில் கப்டன் பிரான்சிஸ் லையிற் என்பவனால் பிரித்தானியக் குடியேற்றம் அமைக்கப்பட்டது.
1804 – இரண்டாம் பிரான்சிஸ் ஆஸ்திரியாவின் முத்லாவது மன்னன் ஆனான்.
1812 – இலங்கையில் தாவரவியல் பூங்கா அமைக்கபட்டது.
1898 – அமெரிக்கப் படைகள் புவெர்ட்டோ ரிக்கோவின் மயாகெஸ் நகரினுள் நுழைந்தன.
1920 – லாத்வியாவின் அதிகாரத்தை போல்ஷெவிக் ரஷ்யாவிடம் வழங்கும் உடன்பாடு லாத்வியாவுக்கும் ரஷ்யாவுக்குமிடையில் ஏற்பட்டது.
1954 – கன்னியாகுமரி மற்றும் செங்கோட்டை மாவட்டங்களை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டத்தில் பங்கு பற்றிய 16 தமிழர்கள் காவற்துறையினரால் சுடப்பட்டு மாண்டனர்.
1960 – பிரான்சிடம் இருந்து சாட் விடுதலையை அறிவித்தது.
1965 – கலிபோர்னியாவில் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் வாட்ஸ் என்ற இடத்தில் இடம்பெற்ற இனக்கலவரங்களில் 34 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.
1968 – பிரித்தானியாவின் நீராவித் தொடருந்து தனது கடைசி பயணிகள் சேவையை நடத்தியது.
1972 – வியட்நாம் போர்: கடைசி அமெரிக்க தாக்குதல் படையினர் தென் வியட்நாமை விட்டுப் புறப்பட்டனர்.
1975 – போர்த்துக்கீசத் தீமோரில் உள்நாட்டுக் கலவரம் ஆரம்பித்ததில் அதன் ஆளுநர் “மாரியோ லெமொஸ் பிரெஸ்” தலைநகர் டிலியை விட்டுத் தப்பினார்.
1984 – வானொலி ஒன்றிற்காக தனது குரலை சோதிப்பதற்காக அமெரிக்க அதிபர் ரொனால்ட் றேகன் கூறியது: “எனது சக அமெரிக்கர்களே, ரஷ்யாவை அழிப்பதற்கான சட்டவாக்கத்திற்கு இன்று ஒப்புதல் அளித்திருக்கிறேன். இன்னும் ஐந்து நிமிட நேரத்தில் குண்டுவீச்சு ஆரம்பமாகும்”.
1999 – ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் முழுமையான சூரிய கிரகணம் தென்பட்டது.
2003 – ஆப்கானிஸ்தானுக்கு அமைதி காக்கும் படையை நேட்டோ நாடுகள் அனுப்பின.
2003 – ஜெமா இஸ்லாமியா இயக்கத் தலைவர் ரிதுவான் இசாமுதீன் (ஹம்பாலி) பாங்கொக் நகரில் கைது செய்யப்பட்டார்.
2006 – யாழ் குடாநாட்டையும் இலங்கையின் தென்பகுதியையும் இணைக்கும் ஏ9 நெடுஞ்சாலை காலவரையறையின்றி மூடப்பட்டு யாழ்ப்பாண மக்கள் குடாநாட்டுக்குள் முடக்கப்பட்டனர்.

பிறப்புக்கள்

1837 – மரீ பிரான்சுவா சாடி கார்னோ, பிரெஞ்சு அரசியல்வாதி (இ. 1894)
1897 – எனிட் பிளைட்டன், எழுத்தாளர் (இ. 1968)
1920 – மைசூர் வீ. துரைசுவாமி ஐயங்கார், கருநாடக இசை வீணை வாத்தியக்கலைஞர் (இ: 1997)
1937 – ஜான் ஆபிரகாம், திரைப்பட இயக்குநர் (இ. 1987)
1943 – பெர்வேஸ் முஷாரஃப், பாகிஸ்தான் அதிபர்
1959 – தர்மரத்தினம் சிவராம், இலங்கையின் பிரபல ஊடகவியலாளர் (இ. 2005)

இறப்புகள்

1747 – விஜய ராஜசிங்கன் – கண்டி நாயக்க மன்னன்
1890 – ஜான் ஹென்றி நியூமன், ஆங்கிலக் கர்தினால், ஆக்ஸ்போர்ட் இயக்கத் தலைவர்களில் ஒருவர் (பி. 1801)
1956 – ஜக்சன் பொல்லொக், அமெரிக்க ஓவியர் (பி. 1912)
2014 – ராபின் வில்லியம்ஸ், அமெரிக்க நடிகர் (பி. 1951)

சிறப்பு நாள்

சாட் – விடுதலை நாள் (1960)
பிறேசில் – மாணவர் நாள்
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top