ஆகஸ்டு 12 (August 12) கிரிகோரியன் ஆண்டின் 224 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 225 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 141 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
கிமு 30 – மார்க் அந்தோனி போரில் தோல்வியடைந்ததை அடுத்து எகிப்தின் கிளியோபாத்ரா தற்கொலை செய்து கொண்டாள்.
1281 – மொங்கோலியப் பேரரசன் குப்ளாய் கானின் கடற்படைகள் ஜப்பானை அணுகும் போது சூறாவளியில் சிக்குண்டு இறந்தனர்.
1480 – ஒட்டோமான் படையினர் இஸ்லாம் மதத்திற்கு மாற ஒப்புக்கொள்ளாத 800 கிறிஸ்தவர்களை தலையை சீவிக் கொன்றனர்.
1499 – வெனிசியர்களுக்கும் ஒட்டோமான் துருக்கியர்களுக்கும் இடையில் முதற் போர் இடம்பெற்றது.
1833 – சிக்காகோ அமைக்கப்பட்டது.
1851 – ஐசாக் சிங்கர் தனது தையல் இயந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.
1853 – நியூசிலாந்து சுயாட்சி பெற்றது.
1877 – அசாப் ஹோல் என்பவர் செவ்வாய்க் கோளின் டெய்மோஸ் என்ற சந்திரனைக் கண்டுபிடித்தார்.
1883 – கடைசி குவாகா (வரிக்குதிரை வகை) ஆம்ஸ்டர்டாமில் இறந்தது.
1914 – முதலாம் உலகப் போர்: பிரித்தானியா ஆஸ்திரியா-ஹங்கேரியுடன் போரை அறிவித்தது. பிரித்தானிய இராச்சியதின் அனைத்து குடியேற்ற நாடுகளும் இதனுள் அடங்கின.
1952 – மொஸ்கோவில் 13 யூத இன அறிவியலாளர்கள், கவிஞர்கள் கொல்லப்பட்டனர்.
1953 – சோவியத் ஒன்றியம் ஜோ 4 என்ற தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை நடத்தியது.
1960 – எக்கோ I என்ற முதலாவது தொலைத்தொடர்பு செய்மதி ஏவப்பட்டது.
1964 – இனவெறிக் கொள்கை காரணமாக தென்னாபிரிக்கா ஒலிம்பிக்கில் விளையாடத் தடை செய்யப்பட்டது.
1978 – ஜப்பானும் மக்கள் சீனக் குடியரசும் தமக்கிடையே நட்புறவு, அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தின.
1981 – ஐபிஎம் தனி மேசைக் கணினி வெளியிடப்பட்டது.
1985 – ஜப்பானில் இரண்டு பயணிகள் விமானங்கள் மோதிக் கொண்டதில் 520 பேர் கொல்லப்பட்டனர். 4 பேர் காப்பாற்றப்பட்டனர்.
1985 – ஈழத் தமிழ்ப் போராளிக் குழுக்களுக்கும் இலங்கை அரசுக்கும் இடையில் 2ம் கட்ட திம்புப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாயின.
1990 – வீரமுனைப் படுகொலைகள், 1990: அம்பாறை, வீரமுனையில் நானூறுக்கும் மேற்பட்ட தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
1990 – அமெரிக்கா, தென் டகோட்டாவில் டிரன்னொசோரஸ் என்னும் டைனசோரின் முழுமையான எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது.
2000 – கே-141 கூர்ஸ்க் என்ற ரஷ்யக் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல் பயிற்சியின் போது 118 பேருடன் பாரெண்ட்ஸ் கடலில் மூழ்கியது.
2005 – ஸ்ரீ லங்காவின் வெளிவிவகார அமைச்சர் லக்சுமன் கதிர்காமர் கொழும்பில் அவரது வீட்டில், நீச்சல் தடாகத்தில் நீராடும் போது சுடப்பட்டு அடுத்த நாள் இறந்தார்.
2005 – மாலை தீவுகளில் அரசுக்கெதிராக கிளர்ச்சி இடம்பெற்றது.
2005 – இலங்கையின் தமிழ் வானொலி, தொலைக்காட்சி அறிவிப்பாளர் ரேலங்கி செல்வராஜா கொலை செய்யப்பட்டார்.
2006 – இலங்கையின் புத்திஜீவிகளில் ஒருவரான கேதீஸ் லோகநாதன் கொழும்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பிறப்புக்கள்
1887 – எர்வின் சுரோடிங்கர், ஆஸ்திரிய இயற்பியலாளர் (இ. 1961)
1912 – சோ. சிவபாதசுந்தரம், வானொலி ஒலிபரப்பாளர், பிபிசி தமிழ் ஒலிபரப்புக்கு தமிழோசை எனப் பெயரிட்டவர் (இ. 2000)
1924 – ஸியா உல் ஹக், பாகிஸ்தான் அதிபர் (இ.1988)
1928 – தமிழண்ணல், தமிழறிஞர் (இ. 2015)
1971 – பீட் சாம்ப்ரஸ், அமெரிக்க டென்னிஸ் வீரர்
இறப்புகள்
கிமு 30 – ஏழாம் கிளியோபாட்ரா, எகிப்திய அரசி (பி. கிமு 69)
1638 – ஜோகனஸ் அல்தூசியஸ், செருமானிய மெய்யியலாளர் (பி. 1557)
1827 – வில்லியம் பிளேக், ஆங்கிலேயக் கவிஞர், ஓவியர் (பி. 1757)
1848 – ஜார்ஜ் ஸ்டீபென்சன், ஆங்கிலேயப் பொறியாளர் (பி. 1781)
1955 – தாமசு மாண், இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற செருமானியர் (பி. 1875)
1964 – இயான் பிளெமிங், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1908)
1989 – வில்லியம் ஷாக்லி, இயற்பியலுக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1910)
2005 – ரேலங்கி செல்வராஜா, இலங்கை நடிகை, ஊடகவியலாளர் (பி. 1960)
சிறப்பு நாள்
அனைத்துலக இளையோர் நாள்