தமிழகத்தில் இன்று முதல் 200 ரூபாய் நோட்டுகள் வினியோகம்.
ஆகஸ்ட் 28, 2017
0
தமிழகத்தில் புதிய ரூ.200 நோட்டுகள் இன்று முதல் வினியோகிக்கப்பட உள்ளது. புதிய ரூ.200 நோட்டுகளை இந்திய ரிசர்வ் வங்கி அச்சிட்டுள்ளது. இந்த நோட்டுகள் டெல்லி, மும்பை போன்ற முக்கிய நகரங்களில் புழக்கத்துக்கு வந்துவிட்டது. சென்னை ரிசர்வ் வங்கிக்கு இந்த புதிய ரூ.200 நோட்டுகள் கன்டெய்னர்கள் மூலம் ஏற்கனவே கொண்டுவரப்பட்டு விட்டன. தொடர் விடுமுறை மற்றும் வங்கிகள் வேலை நிறுத்தம் காரணமாக புதிய ரூ.200 நோட்டுகள் வங்கிகளுக்கு பிரித்து கொடுக்கப்படவில்லை. இந் நிலையில் இந்த புதிய ரூ.200 நோட்டுகள் தமிழகம் முழுவதும் உள்ள குறிப்பிட்ட வங்கிகளில் மட்டும் முதற்கட்டமாக பிரித்து கொடுக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழக வங்கிகளில் இன்று முதல் ரூ.200 புதிய நோட்டுகள் வினியோகம் செய்யப்படுகிறது. வங்கி கிளைகளில் பணம் எடுக்க செல்லும்போது மட்டுமே இந்த புதிய ரூ.200 நோட்டுகள் வழங்கப்பட உள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி கணக்குகளில் இருந்து மட்டுமே பெற முடியும். தனியாக யாரும் சென்று வாங்க முடியாது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க