தஞ்சை மாவட்டத்திற்கு பயிர் காப்பீட்டு இழப்பீட்டு தொகை ரூ.215.31 கோடி மாவட்ட ஆட்சியர் தகவல்.
ஆகஸ்ட் 13, 2017
0
தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி பஜல் பீமயோஜனா 2016-2017 திட்டத்தின் கீழ் வேளாண் பயிர்களுக்கான பயிர்க் காப்பீட்டினை நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் காப்பீட்டு நிறுவனத்தில் காப்பீட்டுத் தொகை செலுத்தி பதிவு செய்துள்ள வேளாண் பெருங்குடி மக்களுக்கு மேற்கண்ட நிறுவனத்திடமிருந்து பயிர்க் காப்பீடு இழப்பீட்டு தொகையாக தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மட்டும் ரூ.215.31 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்டவாறு பயிர் காப்பீடு இழப்பீ ட்டுத் தொகையாக அனுமதிக்கப்பட்டுள்ள ரூ.215.31 கோடியில் நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் காப்பீடு நிறுவனத்தால் ஏற்கனவே ரூ.100.05 கோடி விடுவிக்கப்ப ட்டதில் 12 ஆயிரத்து 346 விவசாயிகளுக்கு ரூ.19.10 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்ப ட்டுவிட்டது. தற்போது நாளது தேதியில் 34 ஆயிரத்து 925 விவசாயிகளுக்கு ரூ.98.86 கோடிக்கு காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து தொகை மற்றும் விவரம் பெறப்பட்டுள்ளது.
இதில் தஞ்சாவூர், பூதலூர் மற்றும் திருவையாறு வட்டங்களில் 14 ஆயிரத்து 605 விவசாயிகளுக்கு, ரூ.43.53 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பயிர்க் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து வர வேண்டிய மீதமுள்ள முழுத் தொகையினையும் நிலுவையுள்ள பயனாளிகள் பட்டியல் விவரத்தினையும் தஞ்சாவூர் மாவட்டத்திற்கான பயிர்க்காப்பீடு இழப்பீட்டுத் தொகையினை விரைவில் பெற்று பயிர்க் காப்பீடு செய்த அனைத்து விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க