பட்டுக்கோட்டையில் விதைப்பந்து திருவிழா 48 மணி நேரத்தில் 11,11,111 விதைப்பந்து சாதனை முயற்சி.
ஆகஸ்ட் 13, 2017
0
பட்டுக்கோட்டையில் விதைகள் அமைப்பு சார்பில் விதைப்பந்து திருவிழா நேற்று காலை 6 மணிக்கு தொடங்கியது. இன்று (ஞாயிறு) காலை 6 மணி வரை 48 மணி நேர இடைவிடா முயற்சியில் 11,11,111 விதைப் பந்துகள் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக நேற்று காலை 6 மணிக்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் விதைப் பந்து தயாரிக்கும் பணி தொடங்கியது. மழை, மரம், மனிதம் மலர நாளைய பூமிப்பந்தின் அடையாளமாக விதைகள் அமைப்பினர் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர். நேற்று காலை தொடங்கிய விதைப் பந்து திருவிழாவிற்கு விதைகள் அமைப்பின் தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார். தஞ்சை மாவட்ட வன அலுவலர் குருசாமி முன்னிலை வகித்தார். இயற்கை வேளாண் விஞ்ஞானி திருவாரூர் நெல் ஜெயராமன் விதைப் பந்து திருவிழாவை தொடங்கி வைத்தார். இந்த விதைப் பந்து திருவிழாவை பட்டுக்கோட்டை எம்எல்ஏ சேகர், முன்னாள் நகராட்சி கவுன்சிலர் சுபராஜேந்திரன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரதினத்தன்று ஒவ்வொரு பகுதியாக சென்று விதைப் பந்துகளை சாலைகள் மற்றும் ஏரி, குளங்களில் போட திட்டமிட்டுள்ளதாகவும், மேலும் மரம் வளர்க்க விருப்பமுள்ள பொதுமக்களும் விதைப் பந்துகளை பெற்றுச் செல்லலாம் என்றும் விதைகள் அமைப்பினர் தெரிவித்தனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க