தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிய மழை தினமும் இரவில் பெரிது வருகிறது. இதனால் பேராவூரணியில் பிரதான சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடி வருகிறது. தற்போது பேராவூரணி மற்றும் சுற்றுப்புற பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவுகிறது. இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி நேர நிலவரப்படி பேராவூரணி 61 மி.மீ மழை பதிவாகியது. தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக திருவையாறில் 100 மி.மீ, பட்டுக்கோட்டையில் 23 மி.மீ, பேராவூரணி 61 மி.மீ, அதிராம்பட்டினத்தில் .49.20 மி.மீ, மதுக்கூரில் 15.20 மி.மீ மழை பதிவாகி உள்ளது.
பேராவூரணியில் 61 மி.மீ மழை பதிவு.
ஆகஸ்ட் 14, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க