பேராவூரணி அரசுக் கலை அறிவியல் கல்லூரியில் விரைவில் இளங்கலை வணிக மேலாண்மை (பிபிஏ) பாடப்பிரிவு விரைவில் தொடங்கப்படுகிறது எனசட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்தார்.அவர் மேலும் கூறுகையில், “கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசால் தொடங்கப்பட்டு, சிறப்பாக நடைபெற்றுவரும், அரசுக் கல்லூரியில் 5 பாடப் பிரிவுகளில் இளங்கலை பாடப் பிரிவுகள் நடைபெற்று வருகின்றன. மேலும் புதிய இளங்கலை பாடப்பிரிவுகள் மற்றும் பட்ட மேற்படிப்பு வகுப்புகள் வேண்டும் என கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்திருந்தனர். அதனடிப்படையில் பேராவூரணி அரசு கலைஅறிவியல் கல்லூரிக்கு, இளங்கலை வணிக மேலாண்மை (பிபிஏ) பாடப்பிரிவு அனுமதிக்கப்பட்டது. விரைவில் அதற்கான பணிகள் தொடங்கும்” என்றார். இப்பாடப் பிரிவுக்கு இன்னும் சில நாட்களில் மாணவர் சேர்க்கை அறிவிப்பு வெளியாகும் எனக் கூறப்படுகிறது. மேலும் 30 முதல் 60 இருபால் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி கிடைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
பேராவூரணி அரசுக் கல்லூரியில் இளங்கலை வணிக மேலாண்மை (பிபிஏ) பாடப்பிரிவு விரைவில் தொடக்கம்.
ஆகஸ்ட் 05, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க