பேராவூரணி அருகில் உள்ள மல்லிபட்டினம் மீன்பிடி துறைமுக விரிவாக்க பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பேராவூரணி அருகில் உள்ள மல்லிபட்டினம் மீன் பிடிதுறை முகத்தை விரிவுப்படுத்தும் விதமாக 2015ம் ஆண்டு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
2 ஆண்டுகளுக்கு பின் அரசு துறைமுக பணிகளுக்காக ரூ.66 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.
அதன் பின் கடந்த மாதம் பணிகள் துவங்கியது. இந்நிலையில் நேற்று முன்தினம் நடந்து வரும் பணிகளை உலக வங்கி உயர் அதிகாரி கிருஷ்ண மூர்த்தி, தஞ்சை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குனர் உமா, மீன்வளத்துறை ஆய்வாளர் (பொ) கர்ணன் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது நடை பெற வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினர்.
மேலும் மல்லிபட்டினம் பகுதி மணல் சார்ந்த தரைக்கடல் பகுதி. இங்கு பணிகள் நடைபெற லாரி மற்றும் டிராக்டர்கள் மூலம் செம்மண் அடித்து நிரப்பப்படுகிறது. இது நாளடைவில் கரைந்து களி மண்ணாக மாறிவிடும் இதனால் கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு சேதமடைய வாய்ப்புள்ளது.
எனவே செம்மண் அடிப்பதை நிறுத்திவிட்டு மணல் அடிப்பதற்கு ஆலோசனை வழங்க வேண்டுமென அந்தபகுதியை சேர்ந்த விசைப்படகு மீனவர் பேரவை மாநில செயலாளர் தாஜுதீன் தெரிவித்தார். அதற்கான நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். தஞ்சை மாவட்ட விசைப் படகு மாவட்ட செயலாளர் வடுகநாதன், நிர்வாகி காசிநாதன் உடனிருந்தனர்.
மல்லிபட்டினம் மீன்பிடி துறைமுகவிரிவாக்க பணிகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
ஆகஸ்ட் 10, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க