பேராவூரணி காய்ச்சல் நோய் தடுப்பு விழிப்புணர்வு பேரணி.
ஆகஸ்ட் 09, 2017
0
பேராவூரணி வட்டார சுகாதாரத்துறை சார்பில் டெங்குதடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற் றது. பேரணிக்கு வட்டார மருத்துவ அலுவலர் சவுந்தர்ராஜன் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் ஸ்ரீதர், அரசு தலைமை மருத்துவர் (பொ) ஜஸ்டின் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணியில் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முழக்கங்கள் எழுப்பப்பட்டது. வீடுவீடாகச் சென்று விழிப்புணர்வுதுண்டு பிரசுரம் வழங்கப்பட்டது. பேரணியில் டாக்டர் ரஞ்சித், சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகர், அரசு ஆண்கள் மேல் நி லைப்பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க