பேராவூரணி அடுத்த உடையநாடு சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.
ஆகஸ்ட் 22, 2017
0
பேராவூரணி அருகே உள்ள உடையநாட்டில் இருந்து கைவனவயல் வழியாக பேராவூரணி செல்லும் சாலையை சீரமைக்காவிடில் மறியல்செய்யப் போவதாக பொதுமக்கள் அறிவித்துள்ளனர். உடையநாட்டில் இருந்துகுடியிருப்புகள் வழியே செல்லும் சாலை கடந்த பலவருடங்களாக மேடுகளாகவும், பள்ளங்களாகவும், மழைக்காலங்களில் குட்டை போன்று நீர் தேங்கியும் நடந்து செல்பவர்களுக்கு இடையூறாகவும்,வாகனப் போக்குவரத்துக்கு பயனற்றதாகவும் காணப்படுகிறது.
உரிய அதிகாரிகளிடம் முறையிட்டும் பயன் இல்லாதநிலையில் உடையநாடு பொதுமக்கள் சாலை மறியல் செய்யப் போவதாக கூறுகின்றனர். இதுகுறித்து ஊர் பிரமுகர் அப்துல்கபூர் கூறுகையில், “இப்பகுதியில் தொற்று நோய்களும், காரணமில்லாத காய்ச்சலும் இருந்து வருகிறது. இந்நிலையில் தெருக்களில் தேங்கும் நீராலும், நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இந்த சாலையை உடனடியாக சீரமைக்க பணிகள் தொடங்க வேண்டும். தவறினால் மறியலில் ஈடுபடுவதை தவிரவேறுவழியில்லை என்றார்.
Source :Theekkathir
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க