பேராவூரணி கடைமடை பகுதியில் அண்மையில் பெய்த தொடர் மழையின் காரணமாக நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளதால் தரிசாக கிடந்த வயல்களில் விவசாயிகள் ஆழ்குழாய் கிணறு மூலம் நடவுப் பணி மேற்கொண்டு வருகின்றனர்.
பேராவூரணி கடைமடை பகுதியான குருவிக்கரம்பை, வீரியங்கோட்டை, வாத்தலைக்காடு, பள்ளத்தூர், இரண்டாம்புளிக்காடு, நாடியம், கைவனவயல், கழனிவாசல், ரெட்டவயல், பெருமகளூர், விளங்குளம், சோலைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாக ஒருபோகம் சம்பா சாகுபடி மட்டுமே நடைபெற்று வந்தது.கடந்த சில ஆண்டுகளாக மேட்டூர் அணையிலிருந்து முறை வைத்து மட்டும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மேட்டூர் அணையிலிருந்து முறை வைத்தும் தண்ணீர் கிடைக்காததால் சம்பா சாகுபடி முழுமையாக நடைபெறவில்லை. விவசாயிகள் பரவலாக கோடை சாகுபடி செய்வது வழக்கம். தொடர்ந்து மழை இல்லாத காரணத்தால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் நிகழாண்டு கோடை சாகுபடியும் நடைபெறவில்லை. தற்போது கடைமடையில் பரவலாக தொடர் மழை பெய்ததால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ள நிலையில் ஆழ்குழாய் கிணறு வசதியுள்ள விவசாயிகள் தரிசு நிலங்களில் நடவுப் பணி செய்து வருகின்றனர்.
பேராவூரணி கடைமடைப் பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு மூலம் நடவுப்பணிபேராவூரணி கடைமடைப் பகுதிகளில் ஆழ்குழாய் கிணறு மூலம் நடவுப்பணி.
ஆகஸ்ட் 28, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க