பேராவூரணிஅருகே பெரிய கள்ளங்காடு- கொன் றைக்காடு பகுதியில் மதுக்கடை அமைக் கக்கூடாது என வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பேராவூரணி வட்டாட்சியர் எஸ்.கே.இரகுராமன், காவல் துறை ஆய்வாளர் ஜனார்தனன் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுஅளித்தனர். மேலும் மாவட்ட ஆட்சியருக்கும் இதே கோரிக்கையை வலியுறுத்தி மனு அனுப்பி வைக்கப்பட்டது.காலகம்-ஆவுடையார்கோவில் சாலையில் பெரிய கள்ளங்காடு- கொன்றைக்காடு இணையும் பகுதியில் கொன்றைக்காடு கலையரசன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் மதுக்கடைஅமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு, கட்டுமானப்பணி நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து இப்பகுதியில் கடை அமைக்கக் கூடாது. இதனால்இப்பகுதியில் அமைதி கெடும்; பெண்கள், மாணவர்கள், குடியிருப்புவாசிகளுக்கு இடையூறு ஏற்படும் எனக் கூறி,பாரதியார் மற்றும் முல்லை சுய உதவிக்குழுவை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட் டோர் பெரிய கள்ளங்காடு பகுதியில் திரண்டனர்.பின்னர் வாகனங்கள் மூலம் பேராவூரணி சென்று பேராவூரணி வட்டாட்சியர் எஸ்.கே.இரகுராமன், காவல்துறை ஆய்வாளர் ஜனார்தனன் ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். இதுகுறித்து இப்பகுதி பெண்கள் கூறுகையில், ஜனநாயக முறைப்படி அலுவலர்களை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம்.
பொதுமக்கள் எதிர்ப்பை மீறி இப்பகுதியில் மதுக்கடை திறக்க முற்பட்டால், பொதுமக் கள் திரண்டு காலகம் ஆரம்ப சுகாதார நிலையம் கைகாட்டி அருகே பட்டுக்கோட்டை சாலையில் மறியல் போராட்டம் நடத்துவோம் எனத் தெரிவித்தனர்.வேறொரு மதுக்கடை மூடல் இதனிடையே பொதுமக்கள் போராட்டம் காரணமாக முடச்சிக்காடு சமத்துவபுரம் செல்லும் சாலையில், அரசு கலை அறிவியல் கல்லூரி அருகேஅமைக்கப்பட்டிருந்த மதுக்கடை வியாழக்கிழமையன்று மூடப்பட்டது. தமிழகம் முழுவதும் தன்னெழுச்சியாக நடைபெற்று வரும் போராட்டங்களால், தொடர்ச்சியாக மதுக்கடைகள் மூடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
நன்றி : தீக்கதிர்
பேராவூரணி அருகே மதுக்கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு வட்டாட்சியர், காவல்துறை ஆய்வாளரிடம் நேரில் மனு.
ஆகஸ்ட் 12, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க