பேராவூரணி பகுதியில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்துவருகிறது. இதனால் ஊமத்தநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் சாலை சேதமடைந்துள்ளது. சாலை சேதமடைந்து ஒரு வாரமாகியும் சீரமைக்க வில்லை. உடையநாடு, வீரியங்கோட்டை, துறையூர், மரக்காவலசை, கைவனவயல், முடச்சிக்காடு, கழனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் ஆரம்ப சுகாதார நிலையம் செல்வதற்கு இந்த சாலையை தான்பயன்படுத்தி வருகின்றனர். சாலை பழுதடைந்த இடத் திலிருந்து 100 மீட்டர்தூரத்தில் தான் ஆரம்ப சுகாதாரநிலையம் உள்ளது. ஆனால் இந்த சாலை பழுதடைந்து கடந்த ஒரு வாரமாக போக்கு வரத்துதடைபட்டுள்ளது. அவசரகாலங்களில் ஆம்புலன்ஸ் கூடசெல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது தான் சாலையை சீரமைக்க ஜல்லிகள் கொட்டப்பட்டுள்ளது. இந்த சாலையை சுற்றி வயல்வெளிகள் தான் உள்ளது. மழை நேரங்களில் இங்கு தேங்கும் தண்ணீர்சாலையின் அருகில் உள்ள வடிகாலில் தான் செல்ல வேண்டும். ஆனால் சாலையின் குறுக்கே வடிகால் வசதி கிடையாது. பழுதடைந்த பகுதி மட்டும் சீரமைக்கப்பட்டால் எதிர்வரும் காலங்களில் பெய்யும் மழையில் மீண்டும் சாலையில் உடைப்பு ஏற்படவாய்ப்புள்ளது. எனவே வடிகால் வசதியுடன் சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத் துள் ள னர்.
நன்றி:தினகரன்
பேராவூரணி அடுத்த ஊமத்தநாடு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு செல்லும் சாலையை வடிகால் வசதியுடன் சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை.
ஆகஸ்ட் 17, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க