பேராவூரணி வட்டாரத்தில் தஞ்சை மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் (மாநிலத் திட்டம்) ஏ.ஜஸ்டின் குறுவை தொகுப்புத் திட்ட பணிகளை ஆய்வு செய்தார்.பேராவூரணி வட்டாரத்தில் குறுவை தொகுப்பு திட்டப் பணிகள் முனைப்புடன் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் காலகம் கிராமத்தில் நீர் பற்றாக்குறையினால் குறுவை நெல் சாகுபடி செய்ய முடியாத இடத்தில் நெல்லுக்கு மாற்றாக உளுந்து சாகுபடி மேற்கொள்ளப்பட்டிருந்த 3 ஏக்கர் பரப்பினை வேளாண்மை துணை இயக்குநர் நேரடியாக ஆய்வு செய்தார். உளுந்து சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் டிஏபி மற்றும் திரவ உயிர் உரங்களை உடனுக்குடன் விநியோகம் செய்திட அறிவுரை வழங்கினார். அடுத்ததாக வேளாண்மை விரிவாக்க மையங்கள் மூலம் இத்திட்டத்தின் கீழ் விநியோகம் செய்து வரும் இடுபொருட்கள் இருப்பு விபரங்களையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.
பேராவூரணி வட்டாரத்தில் குறுவை தொகுப்புத் திட்ட பணிகள் ஆய்வு.
ஆகஸ்ட் 01, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க