பேராவூரணியில் பூட்டிய வீட்டின் அறைக்கு தீ வைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். பேராவூரணி ரயில்வே காலனியில் வசிப்பவர் கணேஷ்குமார் (43). கேங்க் மேஸ்திரி. இவர் கடந்த 5ம் தேதி குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு நேற்று காலை வீடு திரும்பியுள்ளார். வீட்டின் முகப்பு பகுதியில் மரத்துண்டு மற்றும் பேப்பர் உள்ளிட்ட பொருட்கள் தீ வைத்து எரிக்கப்பட்டு கருகிய நிலையில் கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது பீரோ வைக்கப்பட்டிருந்த அறையின் வெளிப்புற ஜன்னல் வழியாக மர்ம நபர்கள் அறையில் உள்ள பொருட்களுக்கு தீ வைத்ததில் பீரோவிலிருந்த ரொக்கப்பணம் ரூ.50 ஆயிரம் மற்றும் 2 பவுன் நகை, நில பட்டா மற்றும் சான்றிதழ்கள் அனைத்தும் எரிந்து நாசமான நிலையில் கிடந்தது. இதுகுறித்து பேராவூரணி போலீசில் கணேஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேராவூரணியில் பூட்டிய வீட்டு அறைக்கு மர்ம நபர்கள் தீ வைப்பு.
ஆகஸ்ட் 10, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க