விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி அனுமதி வழங்கிய இடங்களில் சிலைகளை கரைக்க வேண்டும் கலெக்டர் உத்தரவு.
ஆகஸ்ட் 18, 2017
0
விநாயகர் சதுர்த்தியையொட்டி தஞ்சை மாவட்டத்தில் அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் மட்டும் தான் சிலைகளை கரைக்க வேண்டுமென கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தஞ்சை கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்திருப்பதாவது: விநாயகர் சிலைகள் இயற்கை பொருட்கள் கொண்டு செய்திருக்க வேண்டும். களிமண்ணால் செய்யப்பட்டவை, சுடப்படாதவை, ரசாயன கலலை இல்லாத விநாயகர் சிலை மட்டுமே வழிபாட்டுக்கு பயன்படுத்த வேண்டும்.
சிலைகளுக்கு ரசாயன வர்ணம் பூசுவதை அடியோடு தவிர்க்க வேண்டும். சிலைகளுக்கு வர்ணம் பூசினால் தண்ணீரில் கரையும் மாற்றத்தால் எவ்வித தீங்கு விளைவிக்காத வண்ண கலவையையே பயன்படுத்த வேண்டும். விநாயகர் சதுர்த்தியையொட்டி
தஞ்சைக்கு வடவாறு, கல்லணை கால்வாய், திருவையாறு, பாபநாசம், சுவாமிமலை, கும்பகோணம் ஆகிய பகுதிக்கு காவிரி ஆறு. திருபுவனம், திருவிடைமருதூர், ஆடுதுறை ஆகிய பகுதிக்கு வீரசோழன் ஆறு. பட்டுக்கோட்டை, பேராவூரணி, கடலோர பகுதிகளுக்கு கடல் ஆகியவற்றில் மட்டுமே விநாயகர் சிலைகளை கரைக்க வேண்டும். போலீசாரின் முன் அனுமதி பெற்று சிலைகளை கரைக்க வேண்டும்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க