பேராவூரணியில் இருந்துரெட்டவயல் வழியாக கட்டுமாவடி வரை இயக்கப்பட்டு,தற்போது நிறுத்தப்பட்டுள்ள நகரப்பேருந்தை (தடம் எண் 15) மீண்டும் இயக்கக்கோரி ஆகஸ்ட் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை ரெட்டவயல் கடைவீதியில் சாலை மறியல்செய்யப் போவதாக பல்வேறு அமைப்புகளின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக தமிழக மக்கள் விடுதலை இயக்க அரசியல் செயலாளர் முனைவர் ஜீவானந்தம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் வி.கருப்பையன், சிபிஐ நிர்வாகி நாகலிங்கம் ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தடம் எண் 15 பேருந்து எவ்வித முன்னறிவிப்பும் இன்றி கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.
இதனால் நாட்டாணிக்கோட்டை, கழனிவாசல், சோழகனார்வயல், கொரட்டூர், ரெட்டவயல், பெருமகளூர், அத்தாணி மற்றும்சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், நோயாளிகள், பள்ளி - கல்லூரி செல்லும் மாணவ,மாணவிகள், வேலைக்குச் செல்வோர் என பல தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இலவச பயண அட்டை இருந்தும், பணம் கொடுத்து தனியார் பேருந்துகளில் மாணவர்கள் பயணிக்க வேண்டியுள்ளது. மேலும் தனியார் பேருந்துகளில் கூட்ட நெரிசலில் படிகளில் தொங்கியவாறு செல்வதும், தரையில்விழுந்து அடிபடுவதுமான நிலை உள்ளது.இதுகுறித்து போக்குவரத்துக்கழக கிளை மேலாளரிடம் மனு கொடுத்தும், நேரில் முறையிட்டும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே நிறுத்தப்பட்ட பேருந்தை தொடர்ந்து இயக்க வேண்டும். இதனை வலியுறுத்தி ஆகஸ்ட் 18 ந்தேதி வெள்ளிக்கிழமை ரெட்டவயல்கடைவீதியில் அனைத்துக் கட்சியினர், பொதுமக்கள், ஜனநாயக மாதர் சங்கம் மற்றும் மாணவர்கள் இணைந்துமாபெரும் சாலைமறியல் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தனர்.
நன்றி : தீக்கதிர்
பேராவூரணி இருந்து ரெட்டவயல் வழியாக கட்டுமாவடி வரை பேருந்தை இயக்கக்கோரி.
ஆகஸ்ட் 12, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க