பொதுமக்கள் போராட்டம் எதிரொலியால் கழனிக்கோட்டையில் புதிதாக திறந்த டாஸ்மாக் கடை மூடப்பட்டது. மத்திய, மாநில அரசுகளின் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சாலையோரம் இருந்த கடைகள் அகற்றப்பட்டது. இதையடுத்து அகற்றப்பட்ட கடைகளுக்கு பதிலாக மாற்று இடங்களில் கடைகள் திறக்கப்பட்டு வருகிறது. அதேபோல் தஞ்சை மாவட்டம் பூக்கொல்லை கடைவீதியில் இயங்கி வந்த கடையை அகற்றி பேராவூரணி அரசு கலைக்கல்லூரி இயங்கி வரும் 200 மீட்டர் தூரத்தில் சமத்துவபுரம் அருகே கழனிக்கோட்டை சாலையில் திறந்தனர்.
இந்த கடையை அகற்றக்கோரி சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர் பூக்கொல்லை கடைவீதியில் கடந்த மாதம் 15ம் தேதி மறியலில் ஈடுபட்டனர். ஏடிஎஸ்பி ரத்தினவேல், டிஎஸ்பி சேகர், பேராவூரணி தாசில்தார் ரகுராமன், டாஸ்மாக் மாவட்ட உதவி மேலாளர் புண்ணியமூர்த்தி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி 25 நாட்களில் கடையை அகற்றி கொள்வதாக உறுதியளித்தனர். நேற்றுடன் 25 நாள் கெடு முடிவடைந்த நிலையில் டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் ஒன்றுகூடி நன்றி தெரிவித்தனர்.
மக்கள் போராட்டம் எதிரொலி கழனிக்கோட்டை டாஸ்மாக் கடை மூடல்.
ஆகஸ்ட் 11, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க