ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக நெடுவாசலில் 169வது நாளாக தொடரும் மக்கள் போராட்டம்.

Unknown
0


பேராவூரணி அடுத்த நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி 169வது நாளாக நேற்று அப்பகுதி பெண்கள் மற்றும் விவசாயிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்ய கோரி அப்பகுதி பெண்கள் மற்றும் பொதுமக்கள் 2வது கட்டமாக தொடர்ந்து மரத்தில் தலைகீழாக தொங்குவது, மண் சோறு சாப்பிடுவது, தூக்குப்போட்டுக்கொள்வது, குட்டிகர்ணம் அடிப்பது, கழுத்தில் தூக்கு மாட்டி கொள்வது, அங்க பிரதட்சணம், கண்ணில் கருப்புத்துணி கட்டிக்கொள்வது, வாயில் கருப்பு துணி கட்டிக்கொள்ளவது, தலையில் முக்காடு போடுவது என்பன உள்ளிட்ட பல்வேறு வகையான நூதன போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று 169வது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் அப்பகுதி பெண்கள் மற்றும் விவசாயிகள் நெடுவாசல் நாடியம்மன் கோயில் திடலில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top