தஞ்சை மாவட்டத்தில் 23 ஊராட்சிகளில் கிராமசபை கூட்டம் 26-ந்தேதி நடக்கிறது.

Unknown
0


தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 23 ஊராட்சிகளில் செப்டம்பர் 26 ஆம் தேதி நடப்பு நிதியாண்டில் 2017-18 ஆம் ஆண்டிற்கு மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் செயல்பாடுகளை மத்திய அரசின் அறிவிப்பின்படி சமூக தணிக்கை தொடர்பாக சிறப்பு கிராமசபை கூட்டம் நடைபெறுகிறது.இதுகுறித்து தஞ்சை மாவட்ட ஆட்சியர் ஆ.அண்ணாதுரை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் குருங்குளம் மேற்கு, ராயந்தூர், பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தில் தொண்டராயன்பாடி, புதுப்பட்டி, திருவையாறு ஊராட்சி ஒன்றியத்தில் கல்யாணபுரம் 1 ஆம் சேத்தி, மகாராஜபுரம், ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்தில் திருமங்கலக்கோட்டை மேற்கு,கண்ணந்தங்குடி கிழக்கு, திருவோணம் ஊராட்சி ஒன்றியத்தில் சில்லத்தூர், கும்பகோணம் ஊராட்சி ஒன்றியத்தில் வாளபுரம், தில்லை யம்பூர்,திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றியத்தில் திருச்சேறை, தேப்பெருமா நல்லூர், திருப்பனந்தாள் ஊராட்சி ஒன்றியத்தில் மேலக்காடர், பாபநாசம் ஊராட்சி ஒன்றியத்தில் சூலமங்கலம், ஓலைப்பாடி, அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் நெடுவாசல், பட்டுக்கோ ட்டை ஊராட்சி ஒன்றியத்தில் ஏனாதி, சாந்தா ங்காடு, மதுக்கூர் ஊராட்சி ஒன்றியத்தில் கன்னியாக்குறிச்சி, சொக்கனாவூர், பேராவூரணி ஊராட்சி ஒன்றியத்தில் சொர்ணக்காடு, செருவாவிடுதி தெற்கு ஊராட்சிகளிலும் மேற்காணும் பொருள் தொடர்பாக விவாதித்து தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது, மேற்காணும் 13 வட்டாரங்களில் 23 ஊராட்சிகளில் மட்டும் உள்ள பொது மக்கள் மற்றும் சுய உதவிக்குழு உறுப்பினர்களும் பெருமளவில் கலந்து கொண்டு தங்களது ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top