வரலாற்றில் இன்று செப்டம்பர் 25.

Unknown
0


செப்டம்பர் 25 (September 25) கிரிகோரியன் ஆண்டின் 268 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 269 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 97 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்

1513 – ஸ்பானிய நாடுகாண் பயணி பாஸ்கோ நூனியெத் தே பால்போவா பசிபிக் பெருங்கடலை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர்.
1690 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்திப்பத்திரிகை (Publick Occurrences Both Foreign and Domestick) முதலும் கடைசித் தடவையாகவும் வெளிவந்தது. இது அரசினால் தடை செய்யப்பட்டது.
1789 – அமெரிக்கக் காங்கிரஸ் அரசியலமைப்பிற்கு மனித உரிமைகளுக்கான 10 திருத்தங்கள் உட்பட 12 திருத்தங்களைக் கொண்டு வந்தது.
1846 – ஐக்கிய அமெரிக்கப் படைகள் சாச்செரி டெய்லர் தலைமையில் மெக்சிக்கோவின் மொண்டெரே நகரைக் கைப்பற்றினர்.
1906 – கரையிலிருந்து படகை வழி நடத்தும் முறை ஸ்பெயினில் இயக்கிக் காட்டப்பட்டது. இதுவே தொலை இயக்கியின் பிறப்பு எனக் கருதப்படுகிறது.
1956 – அத்திலாந்திக் பெருங்கடலைக் கடந்த முதலாவது தொலைபேசிக் கம்பித்திட்டம் TAT-1 நிறுவப்பட்டது.
1957 – ஐக்கிய அமெரிக்காவில் ஆர்கன்சஸ் மாநிலத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 9 கருப்பின மாணவர்கள் 300 இராணுவத்தினர்களின் பாதுகாப்புடன் பாடசாலை சென்றனர்.
1959 – இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா சோமராம தேரர் என்ற புத்த பிக்கு ஒருவரினால் சுடப்பட்டுப் படுகாயமடைந்து அடுத்த நாள் இறந்தார்.
1962 – அல்ஜீரிய மக்கள் சனநாயகக் குடியரசு அமைக்கப்பட்டது.
1978 – கலிபோர்னியாவில் சான் டியாகோ நகரில் இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டதில் 144 பயணிகள் கொல்லப்பட்டனர்.
1983 – வட அயர்லாந்தில் 38 ஐரியக் குடியரசு இராணுவக் கைதிகள் சிறையை உடைத்து தப்பினர்.
1992 – யாழ்ப்பாணம், பூநகரியில் 62 இராணுவக் காவலரண்கள் விடுதலைப் புலிகளினால் தாக்கி அழிக்கப்பட்டன.
2002 – குஜராத் மாநிலத்தில் இந்துக் கோயில் ஒன்றில் இடம்பெற்ற வன்முறையில் 32 பேர் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.

பிறப்புக்கள்

1897 – வில்லியம் ஃபாக்னர், அமெரிக்க எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1962)
1899 – உடுமலை நாராயணகவி, தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், நாடக எழுத்தாளர் (இ. 1981)
1968 – வில் ஸ்மித், அமெரிக்க ராப் இசைப் பாடகர்
1976 – சான்சி பிலப்ஸ், அமெரிக்காவின் கூடைப்பந்து ஆட்டக்காரர்

இறப்புகள்

1978 – ருக்மணி தேவி, சிங்களத் திரைப்பட நடிகை (பி. 1923
1986 – நிக்கலாய் செமியோனொவ், ரஷ்ய வேதியியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1896)
2003 – எட்வர்ட் செயிட், ஆங்கில ஒப்பாய்வுத்துறை அறிஞர் (பி. 1935)

சிறப்பு நாள்

மொசாம்பிக் – பாதுகாப்புப் படையினர் நாள்
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top