பேராவூரணி அருகே அடகு கடை பூட்டை உடைத்து நகை, 5 கிலோ வெள்ளி கொள்ளை.
செப்டம்பர் 12, 2017
0
பேராவூரணி அருகே நகை அடகு கடையை உடைத்து முகமூடி திருடர்கள் கைவரிசை காட்டியுள்ளனர்.பேராவூரணி அருகே உள்ள ஊமத்தநாடு ஊராட்சி உடையநாடு கடைவீதியில் பேராவூரணியைச் சேர்ந்த சொக்கலிங்கம்(60) நகை அடகு கடை வைத்து நடத்தி வருகிறார்.இவர் வழக்கம் போல் ஞாயிறு இரவு 9 மணியளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டார். திங்கட்கிழமை அதிகாலை கடைவீதிக்கு வந்தவர்கள் பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இரும்பு பெட்டகம் வெளியில் உடைபட்டு கிடந்துள்ளது. உடனடியாக சொக்கலிங்கத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடைக்கு வந்த சொக்கலிங்கம் உடனடியாக சேதுபாவாசத்திரம் காவல்துறையில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஆய்வு செய்த போது5 பவுன் நகை, 5 கிலோ வெள்ளிப் பொருட்கள் திருடு போனதுதெரியவந்தது. நான்கு பேர் கொண்ட மர்ம கும்பல் நள்ளிரவு 1 மணியளவில் கண் மட்டும் தெரியும் அளவிற்கு பனிக்குல்லா போன்றமுகமூடி அணிந்து வந்து கடப்பாரையால் கடையின் பூட்டைஉடைத்து உள்ளே சென்று இரும்பு பெட்டகத்தை வெளியில்தூக்கி வந்து அதையும் கடப்பாரையால் உடைத்து அதிலிருந்த நகை வெள்ளி பொருட்களை திருடிச்சென்றதும், கைரேகைகள் பதியாவண்னம் கையுறை மற்றும் கால்உறைஅணிந்து வந்து திருடிச்சென்றது அங்கிருந்த சிசி்டிவி கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும் தஞ்சையிலிருந்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க