பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் ரூ.50 லட்சத்தில் வெளிநோயாளிகள் பிரிவு கட்டிடம் கட்டும் பணி.
செப்டம்பர் 19, 2017
0
பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைத்திலிங்கம் எம்.பி.யின் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் வெளிநோயாளிகள் பிரிவு கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டுவிழா, சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.15 லட்சம் செலவில் ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே, தேசிய ஊரக நலத்துறை சார்பில் அமைக்கப்பட்ட டயாலிசிஸ் பிரிவு தொடக்க விழா நடைபெற்றது. விழாவுக்கு தஞ்சை மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி ராணிஅசோகன் வரவேற்றார். ஆர்.வைத்திலிங்கம் எம்.பி., கலந்து கொண்டு வெளி நோயாளிகள் பிரிவு கட்டிடம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டிவைத்தும், ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே, டயாலிசிஸ் பிரிவு ஆகியவற்றையும் திறந்து வைத்தார். கலந்து கொண்டவர்கள் இதில் கு.பரசுராமன் எம்.பி., சி.வி.சேகர் எம்.எல்.ஏ., தஞ்சை மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குனர் சுப்பிரமணியம் ஜெயசேகர், உதவிகலெக்டர் கோவிந்தராசு, ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட பால் வளத்தலைவர் ஆர்.காந்தி, முன்னாள் நகரசபை உறுப்பினர் சுபராஜேந்திரன், கூட்டுறவு உற்பத்தியாளர் விற்பனை சங்கத்தலைவர் சுப்பிரமணியன், ஒன்றிய எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் முருகானந்தம், தென்னை வாரிய உறுப்பினர் மலைஅய்யன் மற்றும் அதிகாரிகள், அரசுமருத்துவமனை டாக்டர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்துகொண்டனர். முடிவில் அரசுமருத்துவமனை மக்கள் தொடர்பாளர் அண்ணாதுரை நன்றி கூறினார்.
நன்றி:தினத்தந்தி
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க