பேராவூரணி அருகே உள்ள திருச்சிற்றம்பலத்தில் உலக தென்னை தின விழா, தென்னை உழவர் உற்பத் தியாளர் நிறுவன பொதுக்குழு கூட்டம் நடந்தது. தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குநர் ஞானப்பிரகாசம் தலைமை வகித்தார். மேலாண்மை இயக்குநர் துரைச்செல்வம் முன்னிலை வகித்தார். நிறுவன பெருந்தலைவர்வக்கீல் சீனிவாசன் வரவேற்றார்.
வங்கிகளில் விவசாயிகளுக்கான சேவைதிட்டங்கள் பற்றிநபார்டு வங்கி மாவட்ட பொது மேலாளர் சுப்பிரமணியன், பட்டுக்கோட்டை சின்டிகேட் வங்கி முதுநிலை கிளை மேலாளர் விஜயக்குமார், திருச்சிற்றம்பலம் யூனியன் வங்கி கிளை மேலாளர் ராஜேஷ்குமார் ஆகியோர்பேசினர்.