பேராவூரணி அடுத்த திருச்சிற்றம்பலம் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்துத்தர கோரிக்கை.

Unknown
0
பேராவூரணியை அடுத்த திருச்சிற்றம்பலம் அரசுமேல்நிலைப் பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைத்துத்தர வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியருக்குகோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.பட்டுக்கோட்டை தாலுகா திருச்சிற் றம்பலத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி கடந்த பல வருடங்களாக இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 900-க்கும் மேற்பட்ட இருபால் மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். 400-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர்.இந்த பள்ளி வளாகத்திலேயே மாணவியர் விடுதியும் அமைந்துள் ளது.

இப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால் மாணவர்கள் அச்சத்துடனேயே கல்வி பயின்று வருகின்றனர். இதுகுறித்து இப்பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் பா.பாலசுப்பிரமணியன் கூறுகையில், இப்பள்ளியில் மூன்று புறமும் சுற்றுச்சுவர் இல்லாமல் திறந்து கிடக்கிறது. மேற்குப்பகுதியில் அப்போதைய பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் வீரகபிலன் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து மேற்குப்பகுதியில் சுற்றுச்சுவர் கட்டித் தந்தார். ஆனாலும்வடக்கு, தெற்கு, கிழக்கு பகுதிகள் திறந்த நிலையில் உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசுவை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளோம்.

மேலும் மாவட்ட ஆட்சியருக்கும் கோரிக்கை மனு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்றார்.பள்ளியின் எல்லையையொட்டி தென்னந்தோப்புகள் மற்றும் சில குடியிருப்புகளும் உள்ளது. மேலும் இதனால் ஆடு, மாடுகள், கோழிகள் வகுப்பறைக்குள் புகுந்து விடுவதால் மாணவர்களுக்கு கவனச் சிதறல் ஏற்படும் சூழலும் உள்ளது. மேலும், கடந்த ஒரு வார காலத்திற்குள் மட்டும்நான்கைந்து முறை நல்ல பாம்புவகுப்பறைக்குள் புகுந்து விட்டதாகவும், அச்சத்துடனேயே படிப்பதாகவும்கூறும் மாணவர்கள், உணவு இடைவேளை நேரத்தில் அருகில் உள்ள தென்னந்தோப்பு நிழலில் அமர்ந்து உணவு அருந்தும் மாணவர்களை தோப்பின் உரிமையாளர்கள், காவலுக்கு இருப்போர் தரக்குறைவான வார்த்தைகளில் திட்டுவதாகவும் மாணவர்கள் தரப்பில் வேதனை தெரிவித்தனர்.

இதனால் தேவையற்ற பிரச் சனை ஏற்படுவதால் ஆசிரியர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாவதாக கூறப்படுகிறது.இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், பள்ளி வளாகத்திற் குள் உள்ள மாணவியர் விடுதியில் தங்கி பயின்று வரும் இளம் பருவத்தினரான மாணவிகள் அச்சத்துடனேயே உள்ளனர். சுற்றுச்சுவர் இல்லாததால், சமூக விரோதிகள் அத்துமீறி உள்ளே நுழைந்து மாலை நேரங்களில் மது அருந்துவதும், மதுபாட்டில்களை உடைத்து வீசி எறிந்து செல்வதும் தொடர்கதையாகி விட்டது.

பள்ளி வளாகத்திற்குள் நுழையும் மாடுகளை மாணவர்கள் விரட்டி துரத்தும் போது, அருகில் உள்ள தோப்புகளுக்குள் சென்றுநாசப்படுத்தி விடுவதால், தோப்பு உரிமையாளர்கள் மீண்டும் பள்ளி வளாகத்திற்குள் விரட்டி விடும் நிலையும் உள்ளது. அரசு சுற்றுச்சுவர் அமைத்து தந்தால் நல்லது என்றனர்.ஏறத்தாழ 500 மீட்டர் தூரத்திற்கு சுற்றுச்சுவர் தேவைப்படுவதாகவும், பள்ளி நிர்வாகத் தரப்பில் அரசுக்கு கோரிக்கை வைத்திருப்பதாகவும், பொதுப்பணித்துறை அதிகாரிகள் பார்வையிட்டு சென்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.ஆனாலும் கூட பாதுகாப்பற்ற, ஆபத்தான சூழலில் கல்வி பயின்று வரும் மாணவர்களின் நலன் கருதிஉடனடியாக சுற்றுச்சுவர் அமைத்திட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கைஎடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நன்றி:தீக்கதிர்

 
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top