பேராவூரணி அரசு கல்லூரியில் நடந்த பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டத்தில் நீலத்திமிங்கல (ப்ளூ வேல்) விளையாட்டின் ஆபத்துகள் குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஆலோசனை வழங்கப்பட்டது.
பேராவூரணி அரசு கலை அறிவியல் கல்லூரி பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம், கல்லூரி முதல்வர் ராணி தலைமையில் நடைபெற்றது.பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர் ராஜ்மோகன் வரவேற்றார். இக்கூட்டத் தில், நீலத்திமிங்கல (ப்ளூ வேல்) விளையாட்டின் ஆபத்துகள், மாணவர்கள் யாரேனும் விளையாடு வது தெரிந்தால், மற்ற மாணவர்கள் கண்காணித்து, அவர்களை காப்பது, அவற்றில் இருந்து மீள்வதற்கான அறிகுறிகள் குறித்து கல்லூரி பேராசிரியர்கள் உளவியல் ஆலோசனைகளை வழங்கினர். நிறைவாக வணிகவியல் துறைத்தலைவர் பழனிவேலு நன்றி கூறினார்.
நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.