பட்டாசுகள் வாங்க ஆதார், பான் வேண்டும்.
செப்டம்பர் 25, 2017
0
குடோன்களில் இருந்து வாடிக்கையாளர்கள் நேரடியாக பட்டாசுகள் வாங்க ஆதார் மற்றும் பான் எண் வேண்டும் என பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு அனைத்து வித பட்டாசு விற்பனைக்கும் ஜிஎஸ்டி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் பட்டாசு உற்பத்தி குடோன்களில் கொள்முதல் செய்யும் விற்பனையாளர்கள், ஜிஎஸ்டி எண் மூலம் பட்டாசுகளை வாங்கி, அதனை வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்கின்றனர். ஆனால் சில வாடிக்கையாளர்கள் மொத்தமாக பட்டாசுகள் வாங்குவதற்காக, நேரடியாக குடோன்களை அணுகுகின்றனர். அவர்களிடம் ஜிஎஸ்டி எண் இல்லாத காரணங்களால் அதற்கு பதிலாக ஆதார் மற்றும் பான் எண்கள் பெறப்படுகிறது என பட்டாசு உற்பத்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இதன் மூலம் விற்பனையில் ஏற்படும் வரி சிக்கல்களை எளிதில் தவிர்க்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளன.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க