பேராவூரணி கலைகட்டிய ஆயுத பூஜை கொண்டாட்டம்.
செப்டம்பர் 30, 2017
0
பேராவூரணி பகுதியில் தொழில் நிறுவனங்களில் ஆயுத பூஜை விமைசையாக கொண்டாடப்பட்டது. இந்தாண்டும் நேற்று ஆயுத பூஜை கொண்டாடப்பட்டது. தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் அரசு அலுவலகம், வங்கிகள், கல்வி நிறுவனங்களில் கடந்த 28ம் தேதி மாலை ஆயுத பூஜை. சரஸ்வதி பூஜை கொண்டாடினர். தனியார் தொழில் நிறுவனங்கள், வர்த்த்க் நிறுவனங்கள், சிறு வணிகர்கள், ஆட்டோ சங்கங்கள், லாரி உரிமையாளர்கள் போன்றவர்கள் நேற்று ஆயுத பூஜையை விமரிசையாக கொண்டாடினர். இறைவனை வழிப்பட்டு பொங்கல், சுண்டல், பொறி, பழங்கள், அவல் ஆகியவற்றை தொழிலாளர்கள், வாடிக்கையாளர்கள், பொதுமக்களுக்கு வழங்கி ஆயுத பூஜையை கொண்டாடினர். ஆயுத பூஜை ஒட்டி பேராவூரணியில் வாழைமரம், வாழை இலை, பூக்கள், பழங்கள், தேங்காய், பூசனிக்காய் விற்பனை விறு விறுப்பாக இருந்தது.பேராவூரணி நீலகண்டபிள்ளையார் கோவில் சிறப்பு பூஜைகள் நடந்தது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க