பேராவூரணியில் பட்டுக்கோட்டை சாலையில் அரசினர் பிற்படுத்தப்பட்டோர் நல கல்லூரி மாணவியர் விடுதி உள்ளது. விடுதி முன்பிருந்த சாலையில் குப்பைகள் கொட்டப்பட்டு, பல காலமாக அகற்றப்படாததால், துர்நாற்றம் வீசியது. குப்பைகளில் படுத்து புரளும்பன்றிகளால் கல்லூரி விடுதி மாணவிகள் தொற்றுநோய்க்கு ஆளாகும் அபாயம் இருந்தது. உடனடியாக அரசுத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.இதுகுறித்து தீக்கதிரில் ஆகஸ்ட் 27 ஆம் தேதியன்று விரிவான செய்தி வெளியாகியிருந்தது. இந்நிலையில் வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் வி.சௌந்தரராஜன் தலைமையில் வந்தகுழுவினர், குப்பைகளை அகற்றி இடத்தை சுத்தம் செய்து, கிருமிநாசினி தெளித்தனர். அருகிலேயே புதிதாக குப்பைத் தொட்டி ஒன்றையும் வைத்தனர்.
மேலும் அப்பகுதியில் உள்ள குடியிருப்புகள், மதுபானக்கடைகள் ஆகியவற்றில் ஆய்வு மேற்கொண்டதோடு, குப்பைத் தொட்டியில் மட்டுமேகுப்பைகளை கொட்ட வேண்டும் எனவும் அறிவுறுத்தினர். சுகாதாரத் துறையின் செயல்பாடுகளுக்கு இப் பகுதி பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்ததோடு, செய்தி வெளியிட்ட தீக்கதிர் நாளிதழுக்கும் நன்றி தெரிவித்தனர்.ஆய்வின் போது வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகர், மருத்துவமில்லா மேற்பார்வையாளர் கண்ணன், பூச்சியியல் வல்லுநர் வேலுச்சாமி, சுகாதார ஆய்வாளர்கள் பிரதாப்சிங், கருப்பசாமி, ,தவமணி, புண்ணியநாதன், அமுதவாணன், சதீஷ் குமார் ஆகியோர் உடனிருந்த னர்.
நன்றி:தீக்கதிர்
பேராவூரணி அரசு கல்லூரி விடுதி முன்பு குப்பைகள் அகற்றம்.
செப்டம்பர் 01, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க