ஜியோபோன் சிறப்பம்சங்கள்.
செப்டம்பர் 25, 2017
0
ஜியோபோன் சார்ந்த அறிவிப்பு வெளியாகி சில மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் விரைவில் இதன் விநியோகம் துவங்க இருக்கிறது. முதற்கட்ட முன்பதிவுகள் துவங்கி, அமோக வரவேற்பு காரணமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில் ஜியோபோன் விநியோகம் இம்மாத இறுதியில் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜூலை 21-ம் தேதி அறிமுகம் செய்யப்பட்ட ஜியோபோன் முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு ரூ.1,500 என்ற முன்பணம் செலுத்தி ஜியோபோன் வாங்கினால் முன்பணம் திரும்ப வழங்கப்படும் என ஜியோ அறிவித்துள்ளது.
ஏற்கனவே பலமுறை ஜியோபோன் விநியோகம் தாமதமாகியுள்ள நிலையில், ஜியோபோன் சிறப்பம்சங்கள் மற்றும் புகைப்படங்கள் வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது.
ஜியோபோன் சிறப்பம்சங்கள்:
- 2.4 இன்ச் QVGA TFT டிஸ்ப்ளே
- 512 எம்பி ரேம்
- 2 எம்பி பிரைமரி கேமரா
- 0.3 எம்பி செல்ஃபி கேமரா
- 4 ஜிபி இன்டெர்னல் மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- டூயல் கோர் பிராசஸர்
- 4ஜி வோல்ட்இ
- வைபை, ஜிபிஎஸ், ப்ளூடூத்
- வாய்ஸ் அசிஸ்டண்ட்
- 2000 எம்ஏஎச் பேட்டரி
புதிய ஜியோபோனுடன் ஜியோ மியூசிக், மைஜியோ, ஜியோ டிவி, ஜியோசினிமா, ஜியோ எக்ஸ்பிரஸ் நியூஸ் மற்றும் பல்வேறு செயலிகளை இயக்க வழி செய்கிறது. கூடுதலாக ஸ்கிரீனினை பாஸ்வேர்டு, போட்டோ லாக், டார்ச்லைட், அவசர கால அழைப்பு உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது.
இத்துடன் ஜியோபோன் வாடிக்கையாளர்களுக்கு இலவச வாய்ஸ், 300 எஸ்எம்எஸ், தினமும் 1 ஜிபி 4ஜி டேட்டா 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் வாரத்திற்கு பயன்படுத்த சிறப்பு திட்டங்கள் ரூ.53க்கும், இரண்டு நாள் திட்டம் ரூ.23க்கும் வழங்கப்படுகிறது. தற்சமயம் புதிய ஜியோபோன் கருப்பு நிறத்தில் மட்டும் கிடைக்கிறது.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க