பேராவூரணி அடுத்த வெள்ளாளங்காடு கடைகளில் தொடர் திருட்டு.
செப்டம்பர் 14, 2017
0
பேராவூரணியை அடுத்த வெள்ளாளங்காடு கடைவீதியில் மணிகண்டன் என்பவர் கடைகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளார். இவரது கட்டிடத்தில் உள்ள கடைக்காரர்கள் திங்கட்கிழமை இரவு 9 மணிக்கு வழக்கம்போல கடைகளை பூட்டிவிட்டு வீடு சென்றனர். இந்நிலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு அதே கட்டிடத்தில் பால் கடை வைத்துள்ள சுப்பிரமணியன் என்பவர் கடை திறக்க வந்தபோது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தொடர்ந்து அதே வரிசையில் உள்ள கடைகளும் பூட்டு உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டிருந்தது. பழனிசாமி என்பவர் கடையில் ரூ.3 ஆயிரம் ரொக்கம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள், சோப்புகள், சுப்பிரமணியன் என்பவரது உரக்கடையில் ரூ.17 ஆயிரத்து 250 ரொக்கம், ராமு என்பவரது சிமெண்ட் கடையில் ரூ.30 ஆயிரம் ரொக்கம் திருடு போயிருந்தது தெரியவந்தது.இதுகுறித்து கடைக்காரர்கள் அளித்த புகாரின் பேரில், பேராவூரணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்றி:தீக்கதிர்
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க