திடக்கழிவு மேலாண்மை திட்டம் குறித்து ஆய்வு.
செப்டம்பர் 12, 2017
0
பேராவூரணி தேர்வு நிலை பேரூராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் திடக்கழிவுமேலாண்மை திட்டம் குறித்து, கடலூர் மாவட்டத்தில் இருந்து வந்த அதிகாரிகள் ஆய்வுமேற்கொண்டனர்.தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தேர்வுநிலை பேரூராட்சியில் வீடு வீடாகச் சென்று மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் பெறப்படுகின்றன. பின்னர் இவை கம்போஸ்ட் செய்யப்பட்டு இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இவற்றை கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையிலிருந்து வந் துள்ள சிறப்பு அலுவலர்களான பரங்கிப் பேட்டை பஞ்சாயத்து செயல் அலுவலர் திருஞானசம்பந்தம், துப்புரவு ஆய்வாளர் ஜோதி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பேரூராட்சி 1 மற்றும் 15 ஆவது வார்டுகளில் வீடு வீடாகச் சென்று மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மக்கும், மக்கா குப்பைகளை தள்ளுவண்டிகள் மூலம் சேகரிப்பதையும், பின் அவற்றை பேரூராட்சி குப்பை ஏற்றும் வாகனம் மூலம் கொண்டு சென்று, அருகில் உள்ள கொரட்டூர்வளம் மீட்பு பூங்காவிற்கு கொண்டு சென்று,கம்போஸ்ட் உரம் தயாரிக்கப்படுவதையும், அதிகாரிகள் பார்வையிட்டு பாராட்டு தெரிவித்தனர். பின்னர் அதிகாரிகள் கூறுகையில், “150 வீடுகளுக்கு ஒரு வண்டி மூலம்குப்பைகள் சேகரிக்கப்பட வேண்டும்.போதிய பணியாளர்கள் இல்லையெனவும், 8 கிமீ தூரம் கொண்டு செல்ல வாகனம் போதவில்லை எனவும் ஆய்வில் தெரியவந்தது.
இதுகுறித்து அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளோம். பேராவூரணி பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை மற்றும் கம்போஸ்ட் உரம் தயாரித்தல் பணி சிறப்பாகநடைபெறுகிறது” என்றனர்.ஆய்வின்போது பேராவூரணி பேரூராட்சி செயல் அலுவலர் அ.கணேசன், இளநிலை உதவியாளர் இரா.இராஜேந்திரன், துப்புரவு மேற்பார்வையாளர் சந்தனச்செல் வன், வீரமணி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உடனிருந்தனர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க