பேராவூரணி ஆதனூர் சாலையை விரைந்து முடிக்க கோரிக்கை.
செப்டம்பர் 19, 2017
0
பேராவூரணி - அறந்தா ங்கி சாலையில் ஆதனூர் வழியாக ரெட்டவயல் செல்லும் இணைப்பு சாலை யில், பேராவூரணி காவல்நி லையம் பின்புறம் பேராவூ ரணி - காரைக்குடி ரயில் பாதை செல்கிறது. இதை அகல ரயில்பா தையாக மாற்றுவதற்கான பணிகள் நடந்து கொண்டி ருக்கின்றன. புதிதாக அமைக்கப்பட்டு வரும் ரயில் பாதை சாலையில் இருந்து மிகவும் உயரத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இப்போது பேருந்துகள், பொதுமக்கள் சென்று கொண்டிருக்கும் தார்சாலை யிலிருந்து 10 அடி உய ரத்தில் செங்குத்தாக உள்ளது.கூப்புளிக்காடு, கருப்ப மனை, ஆதனூர், பாங்கி ரான்கொல்லை, கழனி வாசல், கொரட்டூர், மணக்காடு என 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பேராவூரணியிலிருந்து ரெட்டவயல் செல்லும் இச்சாலையைக் கடந்துதான் பேராவூரணி செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. அந்த சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது கல் மட்டும் போடபட்ட நிலையில் அந்த பணி நிறுத்தி வைக்கபட்டு உள்ளது. எனவே இந்த சாலையை விரைந்து முடிக்க பொது மக்கள் சார்பாக கோரிக்கை.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க