பேராவூரணி வட்டாரத்தில் கூட்டுப் பண்ணையத் திட்டம்.
செப்டம்பர் 28, 2017
0
பேராவூரணி வட்டாரத்தில் தமிழக அரசின் உத்தரவு மற்றும் மாவட்ட ஆட்சியரின் வழிகாட்டுதலின்படி கூட்டுப் பண்ணைய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பேராவூரணி வேளாண் உதவி இயக்குநர் ஆர். மதியரசன் செவ்வாய்கிழமை வெளியிட்ட செய்திகுறிப்பு. பேராவூரணி வட்டாரத்தில் சிறுகுறு விவசாயிகளின் நலனை மேம்படுத்தவும் அவர்களது வருமானத்தை மும்மடங்காகப் பெருக்கவும் ஒருமித்த பயிர் சாகுபடி மேற்கொள்ள உள்ள சிறுகுறு விவசாயிகளை ஒருங்கிணைத்து 20 விவசாயிகளுக்கு ஓர் உழவர் ஆர்வலர் குழு அமைத்து ஒரு கிராமத்திற்கு 5 உழவர் ஆர்வலர் குழு வீதம் சொர்ணக்காடு, செங்கமங்கலம், பெரியநாயகிபுரம், திருச்சிற்றம்பலம், இடையாத்தி ஆகிய 5 கிராமங்களில் 25 உழவர் ஆர்வலர் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக் குழுக்களுக்கு வேளாண் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் அட்மா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் பயிற்சிகள் ஆகியவற்றில் முன்னுரிமை அளிக்கப்படும். எனவே இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விவசாயத்தை மேம்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க