பேராவூரணி நீலகண்டபுரம் ரயில்வே கேட்டை மூட கிராம மக்கள் எதிர்ப்பு மூடப்பட உள்ள ரயில்வே கேட் ஆய்வு.
செப்டம்பர் 19, 2017
0
பேராவூரணி நீலகண்டபுரம் பகுதியில் நூற்றாண்டு கால பயன்பாட்டில் உள்ள ஆளில்லா ரயில்வே கேட்எண்- எல்.சி.121 ஐ, தற்போது நடைபெற்று வரும் காரைக்குடி- திருவாரூர் அகலரயில்பாதை பணியையொட்டி, நிரந்தரமாக மூடுவதாக ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.இதனால் இப்பாதையை பயன்படுத்தும் சுமார் 10க்கும்மேற்பட்ட கிராம மக்கள், இப்பகுதியில் உள்ள மருத்துவமனை, பள்ளி மற்றும் குடியிருப்புவாசிகள், விவசாயிகள் பாதிக்கப்படுவதாக கூறி,இந்த ரயில்வே கேட் பாதையை மூடக்கூடாது என ரயில்வே துறை, மாவட்ட ஆட்சியர், மத்திய, மாநிலஅமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பி வைத்ததோடு, ஒருகுழு அமைத்து பாதையை மீட்க போராடி வருகின்றனர்.இந்நிலையில் திங்கட்கிழமை அன்று மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.வைத்திலிங்கம், மாவட்ட ஆட்சியருடன் வந்து சம்பந் தப்பட்ட ரயில்வே கேட்டை பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். ரயில்வே கேட் உபயோகிப்பாளர் குழு சார்பில் வழக்கறிஞர் மோகன், பழனிவேலு சங்கரன், யாசீன் ஆகியோர் மாநிலங்களவை உறுப்பினரிடம் தங்கள் கோரிக்கைகளை விளக்கிக் கூறினர்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க