கொய்யா சாகுபடி குறைந்த காலத்தில் அதிக மகசூல்.
செப்டம்பர் 23, 2017
0
ஏழைகளின் ஆப்பிள் என அழைக்கப்படும் கொய்யா, வெப்ப மண்டலத்தில் வளரக்கூடிய ஒரு பழப்பயிர். அடர் நடவு முறையில் கொய்யா பயிரிட்டு, சொட்டு நீர் பாசனத்தின் மூலம் அதிக தண்ணீர் செலவின்றி நல்ல லாபம் ஈட்டலாம். பயிரிட்டு 16 மாதங்களான நிலையில் அறுவடை செய்து ஏக்கருக்கு ஏழு டன் வரை கிடைக்கும். கொய்யா சாகுபடி 20 ஏக்கரில் அடர் நடவு முறையில் கொய்யா 16 மாதங்களுக்கு முன் பயிரிடணும். ஆறு அடிக்கு ஆறு அடி அகலத்தில் ஒரு சதுர மீட்டர் அளவுள்ள குழிகளில் செடிகள் நடப்பட்டன. தோட்டக்கலைத்துறை மானியத்துடன் சொட்டு நீர் பாசனம் அமைக்கணும். ஒரு ஏக்கருக்கு 900 வீதம் 20 ஏக்கருக்கு 12 ஆயிரம் கன்றுகளை நடணும். ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை செலவானது. பனாரஸ், லக்னோ 49, லக்னோ 46 ரக கன்றுகள் நடணும். சொட்டு நீர் பாசனம் அமைக்க தோட்டக்கலைத்துறை 56 ஆயிரம் ரூபாய் வரை 3.20 எக்டேருக்கு மானியம் வழங்கியது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை கவாத்து செய்வதால் கொய்யா மரம் செழிப்பாக வளர்கிறது. தேன். கோமியம், பசு சாணம், ஜீவஅமிர்தம், மூலிகை பூச்சி விரட்டி ஆகிய இயற்கை உரங்களை பயன்படுத்தியதால் எதிர்பார்த்ததை விட நல்ல பலன் கிடைக்கும். 16 மாதங்களான நிலையில் ஒரு ஏக்கருக்கு ஏழு முதல் பத்து டன் வரை காய்கள் கிடைக்கிறது. ஒரு காய் ஒரு கிலோ வரை எடை கொண்டதாகவும் இருக்கிறது. கொய்யா ருசியாகவும், இனிப்பாகவும் இருப்பதால் ஏராளமானோர் தோட்டத்துக்கே வந்து வாங்கி செல்வர். ஒரு கிலோ 80 ரூபாய் வரை போகும். வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம். கன்றுகள் நட்டதுடன் தினமும் கண்காணிக்க வேண்டும். தோட்டக்கலைத் துறையினரின் ஆலோசனையின்படி இயற்கை உரங்களை பயன்படுத்தினால் செடி 15 அடி வரை வளரும். கன்றுகள் வளர்ந்த பிறகு மூன்று நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் விட்டால் போதும். இரண்டாண்டுகளுக்கு பிறகு செலவை எடுப்பதுடன், தொடர்ந்து லாபம் ஈட்டலாம்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க