பேராவூரணி அடுத்த ஊமத்தநாடு ஏரியை தூர்வார கோரிக்கை.
செப்டம்பர் 09, 2017
0
பேராவூரணி ஏ.சேக்இப்ராகிம் தஞ்சை கலெக்டருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.தஞ்சை மாவட்டம் பேராவூரணிக்கு அருகே உள்ள ஊமத்தநாடு கிராமத்தில் பெரிய அளவிலான பாசனஏரி உள்ளது. இந்த ஏரி மூலம் ஊமத்தநாடு, உடையநாடு, ஆலடிக்காடு , குப்பதேவன், சம்பைப்பட்டிணம் ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 4 ஆயிரம் ஏக்கர் உள்ள நிலங்களுக்கு பாசனம் பெறுகிறது.கடந்த இரண்டு வருடங்களாக இந்த ஏரியில் நீர் பெருகவில்லை. இதனால் 4 ஆயிரம் ஏக்கர் நிலங்களும் பாசனம் பெற்று சாகுபடி இல்லாமல் பாலைவனமாக காட்சியளிக்கிறது. இந்த ஏரிக்கு பூக்கொல்லை காட்டாற்று அணைக்கட்டிலிருந்து ஏரிக்குக்கு செல்லும் பாசன வாய்க்கால் தூர்வாரப்படாமல் செடி, கொடிகளும், நெய்வேலி காட்டாமணக்கு போன்றவை படர்ந்து காடுபோல் உள்ளது. ஏரியிலும் நெய்வேலி காட்டாமணக்கு மண்டி கிடக்கிறது. எனவே பாசன வாய்க்காலையும், ஏரியையும் சுத்தம் செய்து ஊமத்தநாடு பெரிய ஏரிக்கு தண்ணீர் தடையின்றி செல்லவும், விவசாயிகள் பாசனம் செய்து விவசாயம் செய்து பயன் பெறவும் ஏரியையும், வாய்க்காலையும் போர்கால அடிப்படையில் தூர்வாரி சீர் செய்து தருமாறு விவசாயிகள் சார்பில் வலியுறுத்தப்படுகிறது. இவ்வாறு தஞ்சை மாவட்ட காங்கிரஸ் பொதுசெயலாளர் பேராவூரணி ஏ.சேக்இப்ராகிம் அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க