தீபாவளி ஆஃபர் சியோமி ரெட்மி.
செப்டம்பர் 23, 2017
0
சியோமி நிறுவனம் தீபாவளி பண்டிகைக்கான சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகை விற்பனையை அறிவித்துள்ளது. சியோமி, ஸ்மார்ட்போன்கள் தள்ளுபடி விற்பனை செப்டம்பர் 27-ம் தேதி காலை 10.00 மணிக்கு துவங்கி, 29-ம் தேதி வரை நடைபெறும் என அறிவித்துள்ளது. Mi செயலியில் பிட் டு வின் சலுகை தினமும் மதியம் 2.00 மணி மற்றும் மாலை 6.00 மணிக்கு வழங்கப்படும் என்று சியோமி நிறுவனம் தெரிவித்துள்ளது. செப்டம்பர் 26-ம் தேதி மதியம் 12.00 மணி முதல் Mi டோக்கன்களை கொண்டு சலுகை கூப்பன்களை பெற முடியும். சியோமி தளத்தில் தி டியா ஹன்ட் பரிசுபோட்டியில் கலந்து கொண்டு சலுகை கூப்பன்களை பயன்படுத்தி சியோமி பொருட்களை பெறலாம். மேலும், இந்த டோக்கன்கள் மூலம் ரூ. 500 வரை தள்ளுபடியும் பெற முடியும். சியோமி நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் ரூ.1 பிளாஷ் விற்பனை என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. குறிப்பிட்ட சில நிமிடங்களுக்கு மட்டுமே நீடிக்கும் இந்த ரூ.1 பிளாஷ் விற்பனை மூலம் ரூ.1க்கு சியோமியின் சாதனங்களை வாங்கலாம். சியோமியின் இந்த பிரத்யேக சிறப்பு விற்பனை செப்டம்பர் 27-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை காலை 11.00 மணி மற்றும் மாலை 5.00 மணிக்கு நடைபெறும். இந்த விற்பனையில் ரெட்மி நோட் 4 உட்பட பல சாதனங்களை பெறலாம். மேலும் தகவல்களை Mi.com என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க