பேராவூரணி அருகே உள்ள தெற்குஒட்டங்காடு பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (59). இவர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி காமாட்சி. இவர்களது மகன் காளிமுத்து (30). சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். காளிமுத்துவுக்கு கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.
சென்னையில் உள்ள வீட்டில் குடியேறுவதற்காக தனது மகன், மருமகள் மற்றும் குடும்பத்தினருடன்ராமசாமி சென்னைக்கு சென்று விட்டு சம்பவத்தன்று இரவுதெற்கு ஒட்டங்காட்டில் உள்ள தனது வீட்டிற்கு வந்தார். அப்பொழுது, தனது புதிய மாடி வீட்டின் பின் பக்க கதவுஉடைக்கப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டின் அறையில் பாதுகாப்பாக ஒரு துணிப்பையில் வைக்கப்பட்டிருந்த 7 பவுன் நகையும், ஷோகேசில் இருந்த ரூ.20 ஆயிரம் பணமும் கொள்ளையடிக்கப்படிருப்பதும் தெரியவந்தது. இதுகுறித்து ராமசாமி திருச்சிற்றம்பலம் காவல்துறையில் புகார் செய்தார்.
நன்றி:தீக்கதிர்
பேராவூரணி அடுத்த தெற்கு ஒட்டங்காடு நகை, பணம் கொள்ளை.
செப்டம்பர் 21, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க