பேராவூரணி அடுத்த குருவிக்கரம்பை கடை வீ தியில் டாஸ்மாக்கடை இயங்கி வந்தது. இந்த கடையை அகற்ற வேண் டுமென கடந்த ஜூலை 2ம் தேதி குருவிக்கரம்பை கிராமமக்கள், பல்வேறு கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதையடுத்து ஜூலை 7ம் தேதி அந்த இடத்திலிருந்து கடையை அகற்றினர். இதை தொடர்ந்து ஜூலை 8ம் தேதி கடைவீ தியிலிருந்து 500 மீட்டர் தூரத்தில் மீண்டும் பொதுமக்களுக்கு இடையூறாக செறுபாலக்காடு செல்லும் சாலை ஓரத்தில் டாஸ்மாக்கடை திறக்கப்பட்டது.
இதனால் மீண்டும் அந்த இடத்தில் கடை அமைக்கக்கூடாது என்று பொதுமக்கள் மறியல் போராட்டம் நடத்த போவதாக அறிவித்தனர். இதை தொடரந்து அப்போதைய பேராவூரணி தாசில்தார் ரகுராமன் தலைமையில் சமாதான பேச்சு வார்த்தை நடந்தது. அப்போது 60 நாட்களில் கடையை அகற்றிவிடுவதாக உறுதியளிக்கப்பட்டது. அதன் படி நேற்றுடன் காலக்கெடு முடிந்ததால் கடையை திறக்கக் கூடாது என்று பொதுமக்கள் கூறினர். தாசில் தார் மற் றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கடையை மூடினர்.
பேராவூரணி அடுத்த குருவிக்கரம்பையில் மக்கள் போராட்டம் எதிரொலி டாஸ்மாக் கடை மூடல்.
செப்டம்பர் 09, 2017
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க