வரலாற்றில் இன்று அக்டோபர் 22.
அக்டோபர் 23, 2017
0
அக்டோபர் 22 (October 22) கிரிகோரியன் ஆண்டின் 295 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 296 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 70 நாட்கள் உள்ளன.
நிகழ்வுகள்
362 – அந்தியோக்கியாவின் “அப்பலோ” ஆலயம் தீப்பற்றி எரிந்தது.
794 – கன்மு பேரரசர் ஜப்பானிய தலைநகரை எய்யன்கியோவுக்கு (தற்போது கியோட்டோ) மாற்றினார்.
1383 – போர்த்துக்கல் மன்னன் முதலாம் பேர்டினண்ட்டின் இறப்பின் பின்னர் ஆண் வாரிசு அற்ற நிலையில் நாட்டில் உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
1633 – மிங் வம்சம் டச்சு கிழக்கிந்தியக் கம்பனியுடன் சீனாவின் தெற்கு பூஜியன் கடலில் போரில் ஈடுபட்டு மெரும் வெற்றி பெற்றது.
1692 – மந்திரம் செய்ததற்காக ஐக்கிய அமெரிக்காவில் வழங்கப்பட்ட கடைசி தூக்கு தண்டனை.
1707 – நான்கு பிரித்தானிய கடற்படைக் கப்பல்கள் சிலி தீவுகளில் மூழ்கியதில் ஆயிரக்கணக்கான மாலுமிகள் கொல்லப்பட்டனர்.
1784 – இரசியா அலாஸ்காவின் கோடியாக் தீவில் குடியேற்றமொன்றை அமைத்தது.
1935ம் ஆண்டு சோவியத் புரட்சி நாட்காட்டி ஒன்றின் ஆறு-நாள் வாரமொன்றின் அக்டோபர் 22 பக்கம்
1797 – பதிவுச் செய்யப்பட்ட முதலாவது பரசூட் பாய்ச்சல் அன்ட்ரே ஜக்கியுஸ் கர்னெரின் என்பவரால் பாரிஸ் நகருக்கு 3200 அடி மேலாக நிகழ்த்தப்பட்டது.
1844 – பாரிய எதிர்பார்ப்பு: வில்லியம் மில்லரின் படிப்பினைகளைக் பின்பற்றிய மில்லரிய கிறிஸ்தவர்கள் இயேசுவின் இரண்டாம் வருகையும் உலக முடிவையும் எதிர்பார்த்திருந்தனர்.
1866 – பிரேசில், ஆர்ஜென்டீனா, உருகுவேக்கு எதிராக பராகுவே போரில் ஈடுபட்டது.
1875 – ஆர்ஜென்டீனாவுக்கான முதலாவது தொலைத்தொடர்பு இணைப்பு ஏற்படுத்தப்பட்டது.
1877 – ஸ்கொட்லாந்தில் பிளான்டையர் சுரங்க விபத்து, 207 சுரங்கத் தொழிலாளர்கள் இறந்தனர்.
1878 – செயற்கை ஒளிக்கு கீழ் நடைப்பெற்ற முதலாவது ரக்பி போட்டி இங்கிலாந்தின் சால்போட் நகரில் நடைப்பெற்றது.
1924 – பன்னாட்டு டோஸ்ட்மாஸ்டர்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.
1943 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் காசெல் நகரம் மீது பிரித்தானிய விமானப்படை குண்டுவீச்சு நடத்தியதில் 10,000 பேர் கொல்லப்பட்டு 150,000 பேர் வீடுகளை இழந்தனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் ஆச்சென் நகரம் நட்பு நாடுகளிடம் வீழ்ந்தது. நட்பு நாடுகளிடம் வீழ்ந்த முதலாவது ஜெர்மன் நகாரம் இதுவாகும்.
1946 – அல்பேனியாவின் கரைக்கு அப்பால் பிரித்தானிய போர்க் கப்பல் கண்ணிவெடியில் சிக்கியதால் 40 பிரித்தானிய கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
1949 – சோவியத் ஒன்றியம் அதன் முதலாவது அணுகுண்டை வெடிக்கச் செய்தது.
1953 – லாவோஸ், பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1956 – பாகிஸ்தான், கராச்சியில் கான்கிரீட் கூரைப் பாகம் வீழ்ந்ததில் 48 பேர் பலி.
1957 – வியட்நாம் போர்: ஐக்கிய அமெரிக்காவின் முதல் போர்ச் சாவு.
1960 – மாலி, பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1964 – பல்கட்சிக் குழு கனடாவின் கொடிக்கான வடிவமைப்பை முடிவுச் செய்தது.
1964 – சான்-போல் சார்ட்ரேக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்காப்பட்டது, எனினும் அவர் அதனைப் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.
1965 – இந்தியா-பாகிஸ்தான் இடையான இரண்டாம் காஷ்மீர் போர் முடிவுக்கு வந்தது.
1968 – நாசாவின் அப்பல்லோ 7 விண்கலம் பூமியை 163 தடவைகள் சுற்றிய பின்னர் அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.
1970 – துங்கு அப்துல் ரகுமான் மலேசியாவின் பிரதமர் பதவியில் இருந்து விலகினார்.
1987 – ஈழப்போர்: யாழ்ப்பாணம் அராலித் துறையில் இந்திய அமைதிப் படையின் உலங்குவானூர்தி தாக்கியதில் பல பயணிகள் கொல்லப்பட்டனர்.
2001 – PSLV C-மூன்று விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
2007 – எல்லாளன் நடவடிக்கை: இலங்கையின் அனுராதபுரம் இலங்கை வான்படைத் தளம் மீது விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் நடத்திய தாக்குதலில் கரும்புலிகள் 21 பேரும், இலங்கை படையினர் 14 பேரும் கொல்லப்பட்டு பல வானூர்திகள் அழிக்கப்பட்டன.
பிறப்புகள்
1919 – டோரிஸ் லெஸ்சிங், 2007 ஆம் ஆண்டுக்கான இலக்கிய நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேயர்
இறப்புகள்
1906 – பால் செசான், பிரெஞ்சு ஓவியர் (பி. 1839)
1925 – அ. மாதவையா, தமிழக எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிகையாசிரியர் (பி.1872)
2011 – சொ. கருப்பசாமி, தமிழக அரசியல்வாதி, முன்னாள் அமைச்சர் (பி. 1955)
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க