சியோமி மி மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.

Unknown
0


சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட Mi மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 5.99 இன்ச் 18:9 ஃபுல் எச்டி டிஸ்ப்ளே, ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர், 6 ஜிபி ரேம் மற்றும் 12 எம்பி பிரைமரி கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்பக்கம் அழகிய செல்ஃபி மற்றும் முக அங்கீகார வசதி (face recognition) வழங்கும் 5 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

முற்றிலும் செராமிக் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளதோடு அல்ட்ராசோனிக் பிராக்சிமிட்டி சென்சார் முன்பக்கம் மறைக்கப்பட்டுள்ளது. இத்துடன் சவுண்டு கைடெட் ஸ்பீக்கர் மர்றும் 50 மெகாவாட் திறன் கொண்ட ஸ்பீக்கர் வழங்கப்பட்டுள்ளது. இது தலைச்சிறந்த மற்றும் துல்லியமான ஆடியோ அனுபவத்தை வழங்கும்.

சிறப்பம்சங்கள்:

- 5.99 இன்ச் டிஸ்ப்ளே, 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ
- 10nm ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர்
- அட்ரினோ 540 GPU
- 6 ஜிபி ரேம்
- 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
- 12 எம்பி சோனி IMX386 பிரைமரி கேமரா
- 5 எம்பி செல்ஃபி கேமரா
- கைரேகை ஸ்கேனர்
- 4ஜி எல்டிஇ, வைபை, ப்ளூடூத்
- 3400 எம்ஏஎச் பேட்டரி, குவால்காம் குவிக் சார்ஜ் 3.0

இந்தியாவில் சியோமி Mi மிகஸ் 2 ஸ்மார்ட்போனின் விலை ரூ.35,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்பட இருக்கும் Mi மிக்ஸ் 2 அக்டோபர் 17-ம் தேதி முதல் விற்பனை துவங்குகிறது. இதைத் தொடர்ந்து நவம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் பிளிப்கார்ட், Mi.com மற்றும் சியோமி ஆஃப்லைன் விற்பனை தளங்களில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top