தஞ்சை மாவட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய நவம்பர்.30ம்தேதி கடைசி நாள்.
அக்டோபர் 12, 2017
0
தஞ்சை மாவட்டத்தில் பயிர் காப்பீடு பதிவு செய்ய வரும் நவம்பர் மாதம் 30ம் தேதி கடைசி நாள் என்று கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார். பிரதம மந்திரியின் பயிர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய நடப்பாண்டில் தஞ்சை மாவட்டத்தில் 874 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் படிகடன்பெறும் விவசாயிகள் அவர்கள் கடன் பெறும் வங்கிகளில் கட்டாயமாக பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்யப்படுவர். கடன் பெறாத விவசாயிகள் தஞ்சை மாவட்டத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் காப்பீடு நிறுவனத்தின் அங்கீகரிக் கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ அல்லது பொது சேவை மையங்கள் மூலமாகவே அல்லது வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் மூலமாகவோ விருப்பத்தின் பேரில் பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறாக சம்பாபருவத்தில் நெற்பயிரிடும் விவசாயிகள் இந்த திட்டத்தில் பதிவு செய்ய வரும் நவம்பர் மாதம் 30ம் தேதி கடைசி. பயிர் காப்பீட்டும் தொகையில் விவசாயிகள் ஏக்கருக்கு ரூ.402 காப்பீட்டு கட்டணமாக செலுத்தினால் போதும். என்று தெரிவித்துள்ளார்.
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க