பேராவூரணியில் பட்டாசு வெடிக்க கட்டுப்பாடு காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.

Unknown
0




பட்டாசு வெடிப்பது தொடர்பாக சென்னை நகர போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளதோடு, பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.
தீபாவளி பண்டிகை நாளை  நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. தீபாவளியை முன்னிட்டு, பட்டாசு வெடிப்பது தொடர்பாக சென்னை நகர போலீசார் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
அதன்படி, தீபாவளி பண்டிகையையொட்டி காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்றும்,
மருத்துவமனை அருகிலோ, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலோ பட்டாசு வெடிக்க கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
குடிசைப் பகுதி உள்ள இடங்களில் மொட்டை மாடியில் நின்றுகொண்டு ராக்கெட் வெடி வெடிக்ககூடாது என அறிவுறுத்தியுள்ள காவல்துறை,
குழந்தைகள் பட்டாசு வெடிக்கும்போது பெற்றோர்கள் அருகில் நின்றுகொண்டு கவனித்துக்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
அதிக ஓசை எழுப்பும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும் என்பதோடு,
போக்குவரத்துக்கு இடையூறாக சாலையின் நடுவிலும் பட்டாசு வெடிக்க கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 500 தீயணைப்பு வீரர்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தீயணைப்புத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து இல்லாத தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top