பேராவூரணி அருகே காட்டாற்றின் குறுக்கே 9 லட்சம் செலவில் தடுப்பணை.
அக்டோபர் 11, 2017
0
பேராவூரணி அருகே வேளாண் பொறியியல் துறை சார்பில் 9 லட்சம் மதிப்பீட் டில் கட்டப்பட்ட தடுப் ப ணையை வேளாண் பொறியியல் துறை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
பேராவூரணி அடுத்த சேதுபாவாசத்திரம் அருகிலுள்ள கடலோரகிராமங்களில் கட லில் பெருக்கு ஏற்படும்போது அந்த பகுதிகளில் உள்ள வாரிகள்,காட்டாறுகள் மூலம் ஊருக்குள் தண்ணீர் புகுந்து அங்குள்ள ஆழ்குழாய் கிணறுகளில் உள்ள தண்ணீர் உப்பு தண்ணீராகவும் மாறுவதால் அங்குள்ள தென்னை மரங்கள் மற்றும் சாகுபடி பயிர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு பின்பட்டுப்போகும் சூழல் ஏற்பட்டது மேலும் குடிப்பதற்கு கூட நல்லதண்ணீரின்றி உப்புத்தண்ணீரில் பொதுமக்கள் குடிக்க வேண்டியநிலை ஏற்பட்டது.இதனால் கடலோர பகுதி மக்கள் கடலில் கலக்க கூடிய காட்டாறுகளின் குறுக்கேதடுப்பணைகட்டினால் நல்ல தண்ணீர் தேங்கி நிலத்தடி நீர்மட்டமும் உயரும் பொதுமக்களுக்கும் பயன்படும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.ஒரு சில இடங்களில் ஆறுகளின் குறுக்கே ஜேசிபி இயந்திரம் மூலம் மண்ணால் ஆன தடுப்பணைகளை அமைத்தனர் இது நல்லபலனை கொடுத்தது.இதனடிப்படையில் முதற் கட்டமாக வேளாண் பொறியியல் துறைசார்பில் நபார்டு வங்கி நிதி உதவிய டன் சேதுபாவாசத் திரம் அருகிலுள்ள திருவத்தேவன் ஊராட்சி சோமநாதன் பட்டிணம் பர்கல் ஆற்றின் குறுக்கே 9 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தடுப்பணை கட்டப்பட் டது தற்போது இதில் தண்ணீர் தேங்கி பயன்பாட்டில் உள்ளது.இந்த அணை கட்டுவதற்கு இப்பகுதி பொதுமக்களின் உழைப்பு மற்றும் தளவாடசாமான்கள் உதவியும் செய்துள்ளனர்.இந்த தடுப்பணை கட்டுமாவடி,சோமநாதன் பட்டினம்,சுப்பம்மாள் சத்திரம் உள்ளிட்ட கடலோரகிராமங்களுக்கு நல்ல பயனாக உள்ளது.இந்த தடுப்பணையை தஞ்சை வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் பன்னீர் செல்வம்,இளநிலை பொறியாளர் செந் தில்குமார், பட்டுக்கோட்டை இளநிலை பொறியாளர் கோவிந்தராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.
நன்றி:தினகரன்
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க